மேலும் அறிய

அரசியல் வன்மம்.. நயினார் நாகேந்திரனிடம் சண்டைக்கு சென்ற மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?

காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்றிருப்பது சிலருக்கு அரசியல் பிரச்சினையாக இருக்கலாம்.  ஆனால் இது காங்கிரஸின் முடிவு அல்ல. தமிழக மக்களின் தீர்ப்பு என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக தங்களைப் பற்றி கவலைப்படுவதை விட, காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுவதை பற்றி அதிகம் கவலைப்படுகிறது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார். 

நயினார் நாகேந்திரன் கூறியது என்ன?

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அப்போது நாட்டின் நலன் கருதி ஆளுநர் உரையில் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் முடிவுகள் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டால் அது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், மேகதாது அணை கட்ட முயற்சிக்கிறது. அதே காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இடமளித்திருக்கக்கூடாது. இது மக்கள் மீது விஜய்க்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது” சாடியிருந்தார். 

பாஜகவுக்கு அரசியல் வன்மம்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புலம்பல், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதை இன்னும் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தார்கள். அந்த மக்கள் ஆணையை மதித்து,  முதல்வர்  விஜய் விடுத்த அழைப்பின் பேரில் காங்கிரஸ் அமைச்சரவையில் பொறுப்பேற்றது. தமிழ்நாட்டில் காங்கிரஸைப் பொறுத்தவரை, தமிழக நலனே முதன்மை. மேகதாது விவகாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் , “ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். சுற்றுல்லாதுறை அமைச்சர் ராஜேஷ்குமார், “தேவைப்பட்டால் அமைச்சர் பதவியையே துறக்கத் தயார்” என்று தெரிவித்திருக்கிறார். இதுவே தமிழ்நாடின் காங்கிரஸின் நிலைப்பாடு.

கர்நாடக பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் தொடர்ந்து மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்போது அவரைக் கண்டிக்கத் துணியாதவர்கள், மோடிஜிடம் சென்று தமிழக உரிமைபற்றி பேச திரணியில்லாதவர்கள் தமிழ்நாட்டில் காங்கிரஸை குறிவைப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு இடம் மட்டுமே பெற்றுள்ள பாஜக, தமிழ்நாட்டில் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை விட, காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதைப் பற்றி அதிகம் கவலைப்படுவது அவர்களுடைய அரசியல் வன்மத்தையே வெளிப்படுத்துகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்றிருப்பது சிலருக்கு அரசியல் பிரச்சினையாக இருக்கலாம்.  ஆனால் இது காங்கிரஸின் முடிவு அல்ல;  தமிழக மக்களின் தீர்ப்பு. அந்த மக்கள் தீர்ப்பை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசனையும் இந்த விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Embed widget