மேலும் அறிய

TN Rain Alert: அடுத்த 3 மணி நேரம்..! 8 மாவட்டங்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டம்? வானிலை நிலவரம் இதோ..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

3 மணிநேரத்திற்கு மழை:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

02.12.2022 மற்றும் 03.12.2022:  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

04.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஊத்து (திருநெல்வேலி) 9, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 7, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), சிவகிரி (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 6, பர்லியார் (நீலகிரி), கீழ் கோதையாறு (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 5, கடம்பூர் (தூத்துக்குடி), பில்லூர் அணை (கோவை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கயத்தாறு (தூத்துக்குடி), பாபநாசம் (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 3, காயல்பட்டினம் (தூத்துக்குடி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), இராஜபாளையம் (விருதுநகர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சிவகாசி (விருதுநகர்), குன்னூர் PTO  (நீலகிரி), ராமநாதபுரம் Agro தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்

தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது.

இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget