போதைக்கு எதிராக விழிப்புணர்வு.. தாமதமாக வந்த அமைச்சர் ; பள்ளி மாணவர்கள் வெயிலில் நிற்க முடியாமல் மயக்கம்..
போதைக்கு எதிராக விழிப்புணர்வு தாமதமாக வந்த அமைச்சர் ; பள்ளி மாணவர்கள் வெயிலில் நிற்க முடியாமல் மயக்கம்
தமிழகம் முழுவதும் போதைக்கு எதிராக விழிப்புணர்வு உறுதியேற்பு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள காவலர் மைரானத்தில் போதைக்கு அடிமையாக கூடாது, போதை பொருட்களால் குடும்பமே சீரழியும் என்பதால் போதை பொருளை ஒழிப்போம் போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதி மொழியை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சிறுபாண்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் கூற 5 ஆயிரம் மாணவ மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்வில் திமுக எம் எல் ஏ புகழேந்தி, லட்சுமணன், ஆட்சியர் மோகன் எஸ் பி ஸ்ரீநாதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்முடி பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதைக்கு எதிரான உணர்வினை உருவாக்க வேண்டுமென்பதால் இந்த விழிபுணர்வு நிகழ்ச்சி நடத்தபடுவதாகவும், காவல் துறைக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமெனவும் கிராமங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்யபட்டால் அதனை தடுக்கும் முழு பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது என்றும் அப்படி கஞ்சா, மது விற்பனை செய்யபட்டால் காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார். மது பழக்கம் என்பது இருக்கவே கூடாது என்ற உணர்வு இளம் வயதிலேயே அனைத்து மாணவர்கள் மனதில் ஏற்பட வேண்டும் என்றும் தற்போது சில பெண்களும் போதைக்கு அடிமையாகும் நிலை வந்துவிட்டதால் அதை ஒழிக்க வீடுகளிலும் கிராமங்கள் தோறும் மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக செயல்பட்டு காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கூறினார்.
போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கி வைக்க அமைச்சர் பொன்முடி ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் மாணவர்கள் மைதானத்தில் வெயிலில் காத்து கிடந்ததை அடுத்து ஆட்சியர் மோகன் தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து கொண்டு ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறித்த நேரத்தில் அமைச்சர் வராததால் பள்ளி மாணவ மாணவிகள் வெயிலில் நிற்க முடியாமல் மயக்கம் அடைந்தனர்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் மைதானத்திலிருந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுடன் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினேன். pic.twitter.com/msNn7FIeHi
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) August 11, 2022
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்