மேலும் அறிய
Advertisement
578 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் - அமைச்சர் சேகர்பாபு
இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள 578 திருக்கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர் பாபு பேட்டி
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து மண்டல இணை மற்றும் துணை ஆணையர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்திய பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் கடந்த 15 மாதங்களில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. 3,118 ஆக்கிரப்மிப்பாளர்களிடம் இருந்து 2,710 ஏக்கர் நிலம் மற்றும் 3,566 கோடி மதிப்பு உள்ள சொத்துக்கள் மீட்க்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சொத்துக்களை வாடகைக்கு விட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
48 முதுநிலை கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 578 கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இரண்டு இந்த மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.
பௌர்ணமி விளக்கு பூஜை அதிகப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தஞ்சை பெரிய கோவில் கோவை பட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த ஆண்டு இரவு முழுவதும் சிவராத்திரி பூஜை மிகப்பெரிய அளவில் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
சங்கரன் கோவிலில் பாம்பாட்டி சித்தரருக்கு விழா எடுக்கப்பட உள்ளது.10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் குறித்து இன்றைய 14 வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பழனியில் ஜனவரி நடைபெறும் குடமுழுக்கு குறித்து முழுமையாக ஆலோசித்துள்ளோம். பொன் எழுத்துக்களால் வரலாற்றில் எழுதும் அளவில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படும். கடந்த 2021 ஆண்டு சட்ட பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் 75% சதவீதம் திட்டங்களின் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மற்ற திட்டங்களின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 25% திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 17 வயது சிறுமிக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வைத்த விவகாரம்,
குழந்தை திருமணம் சட்டத்திற்கு புறம்பானது. தீட்சிதர்கள் அல்ல யார் அதை செய்தாலும் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும். சட்டம் தன் கடமையை செய்யும்” என்று கூறினார். திமுகவிற்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு முடிவுரை எழுதப்படும் என தெரியவரும் என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion