Karur: அரசு நிகழ்ச்சி பேனரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் - கரூரில் பரபரப்பு
மேடையில் வைக்கப்பட்ட பதாகையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பெயர் இடம் பெற்றிருந்தது.
![Karur: அரசு நிகழ்ச்சி பேனரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் - கரூரில் பரபரப்பு Minister Senthil Balaji name on the banner placed on the stage in karur TNN Karur: அரசு நிகழ்ச்சி பேனரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் - கரூரில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/42dc0e89e055aed42ca39271cad2a5ac1690359472604113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவிகள் சைக்கிள் பெல் மூலம் ஒலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
கரூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் கோட்டாட்சியர் ரூபினா ஆகியோர் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக சிஎஸ்ஐ பெண்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் 26 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முடிந்து மேயர் மற்றும் அதிகாரிகள் செல்லும் போது, அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மாணவிகள் சைக்கிள் பெல் அடித்து ஒலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாணவி ஒருவரின் மிதிவண்டியில் பெல் அடித்துக் கொண்டிருக்கும் போதே கழண்டு கீழே விழுந்தது. மேலும், நிகழ்ச்சிக்காக மேடையில் வைக்கப்பட்ட பதாகையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பெயருக்கு மேல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் என்று இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)