பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி..
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி.. Minister S.S. Sivasankar tests positive for COVID-19 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/09/5d7242bc33a03457d5b62b3709e15d2e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதிதாக பொறுப்பேற்றக்கொண்ட அமைச்சர்களில் ஒருவர் சிவசங்கர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவசங்கரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறிகள் தெரிந்ததை தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்று உறுதியானதைத் தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 23,110 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தற்போது கோவிட்-19 பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,39,401-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் நோய்த்தொற்றினால் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா தொடர்பாக இறப்பு எண்ணிக்கை 15,412 ஆக அதிகரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)