மே 2021-நவம்பர் 2021க்கான செயல்பாட்டு அறிக்கையை தொகுதி மக்களுக்கு வழங்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
மே 2021-நவம்பர் 2021க்கான செயல்பாட்டு அறிக்கையை தொகுதி மக்களுக்கு வழங்கி வருகிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
மே 2021-நவம்பர் 2021க்கான செயல்பாட்டு அறிக்கையை தொகுதி மக்களுக்கு வழங்கி வருகிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்பட்டு வருகிறார். இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த காலம் தொட்டே தனது செயற்பாட்டு அறிக்கையை ஒவ்வொரு 6 மாதமும் தொகுதி மக்கள் பார்வைக்கு சமர்ப்பித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த முறை அவர் மாநிலத்தின் நிதிமைச்சராக உள்ளதால் தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மே 2021-நவம்பர் 2021க்கான செயல்பாட்டு அறிக்கையை வழங்கி வருகிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2016ம் ஆண்டு முதல் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக எனது செயல்பாட்டு அறிக்கையை ஒவ்வொரு 6 மாதமும் தவறாமல் சமர்ப்பிக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக மே 2021-நவம்பர் 2021க்கான அறிக்கை தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
https://drive.google.com/file/d/1Ft9cpsFoZkyNI98T_m02JvjMHQEVwgTa/view என்ற பக்கத்தில் பிடிஎஃப் வடிவிலும் தனது செயற்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
2016ம் ஆண்டு முதல் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக எனது செயல்பாட்டு அறிக்கையை ஒவ்வொரு 6 மாதமும் தவறாமல் சமர்ப்பிக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக மே 2021-நவம்பர் 2021க்கான அறிக்கை தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) January 12, 2022
இணைப்பு: https://t.co/Xd5bUqBOPG pic.twitter.com/Ck1kDNxDrt
அதிகம் பேசப்பட்ட அமைச்சர்: திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அதிகம் பேசப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தொடர்பாக அவருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே பெரிய வார்த்தைப் போரே நடந்தது.
அதுபோல் பத்திரிகையாளர்களை சற்றே காட்டமாக அணுகுகிறார் என்ற புகார்களும் அவர் மீது வந்தது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதால் அண்ணன் அமைச்சரவையிலிருந்து மாற்றப்படலாம் என அரசல் புரசலாக தகவல்கள் கசிய அப்படியே அவரின் போக்கும் மாறியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும், 2016ம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக தனது செயல்பாட்டு அறிக்கையை ஒவ்வொரு 6 மாதமும் தவறாமல் சமர்ப்பிக்கும் அவரது பழக்கத்திற்கு சபாஷ் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அவருக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளதால், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் பதவியை அவர் அண்மையில் ராஜினாமா செய்தார். திமுகவின் அடுத்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக டிஆர்பி ராஜா நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.