மேலும் அறிய

Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமைச்சர்!

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கள்ளச்சாராயம் பாதிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 19 ஆம் தேதி விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமைச்சர்!

கள்ளச்சாரயத்தால் 52 பேர் உயிரிழப்பு:

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 52 பேர் கடந்த இரண்டு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழதனர். அந்த வகையில், கருணாபுரம் சிறுவங்கூர்ரோடு தா்மன் மகன் சுரேஷ் (வயது 46),  கணேசன் மகன் பிரவீன் (29), கடலூா் மாவட்டம் பண்ருட்டி ஆண்டிக்குப்பத்தை சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் (40), கருணாபுரம் கிழக்கு தெருவை சோ்ந்த சேகா் (65), கிருஷ்ணமூர்த்தி(62), மணி(58),  குப்பன் மனைவி இந்திரா(48),  கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன்,  தனகோடி (55) 10, சுப்பிரமணி(60),  மாதவச்சேரியை சேர்ந்த நாராயணசாமி (65), வாய்க்கால் மேடு ராமு (50),  ஏமேப்பேர் ஆறுமுகம் (75) உள்ளிட்ட 52 பேர் உயிரிழந்தனர்.  

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 47 பேர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பத்து பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமைச்சர்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:

இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 30 பேரின் உடல் நிலை குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து கேட்டறிந்தார். மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மருத்துவ ஏற்பாடுகள் தீவிரம்:

விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் இருந்து 4 சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு, சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 18 பேர் ஆம்புலன்ஸ்கள் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 6 பேருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேல்சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget