மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 23 கன அடியாக நீடித்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 23 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 23 கன அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 23 கன அடியாக நீடித்து வருகிறது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 60.14 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 24.79 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 23 கன அடியாக நீடித்து வருகிறது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 87.89 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 14.71 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 130 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 751 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 48.57 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 10.52 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 65 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு..!
ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு..!
Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு..!
ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு..!
Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
'காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?' - செல்வப்பெருந்தகை
'காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?' - செல்வப்பெருந்தகை
IPL 2024 Points Table: வெற்றியுடன் நடையைக்கட்டிய லக்னோ.. பிளே ஆஃப்-ல் யார் யார்..? முழு புள்ளிகள் பட்டியல் இதோ!
வெற்றியுடன் நடையைக்கட்டிய லக்னோ.. பிளே ஆஃப்-ல் யார் யார்..? முழு புள்ளிகள் பட்டியல் இதோ!
Embed widget