தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் என்று கத்திரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 25 நாள்கள் இருக்கும் அக்னி நட்சத்திரம் வரும் 29ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நாள்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும். இதனால், மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்றும், பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், குழந்தைகளை வெளியில் விளையாட விடாமலும், அவர்களுக்கு நீர்ச்சத்து குறையாத அளவுக்கு பழங்கள், தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தலா 2 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது எனவும் கூறியுள்ளது.

மேலும், தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வரும் 7ஆம் தேதி கடலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

வரும்  8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மேற்கு மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக மாவட்டங்கள், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.வரும் 10ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

கோடை காலத்தில் அதிகரித்து வரும் நிலையில், மழைக்கான வாய்ப்பு செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Tags: chennai Tamilnadu rain rain chances Meteorological Center

தொடர்புடைய செய்திகள்

TN Lockdown Extension : கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : என்ன இயங்கும், என்ன இயங்காது?

TN Lockdown Extension : கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : என்ன இயங்கும், என்ன இயங்காது?

TM Krishna | ”புதிய ஐடி விதிகள் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது” : உயர்நீதிமன்றத்தில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா மனு

TM Krishna | ”புதிய ஐடி விதிகள் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது” : உயர்நீதிமன்றத்தில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா மனு

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

’நியூட்ரினோ ஆய்வக அமைவிடம்’ : கேள்விக்குறியாகும் புலிகளின் பாதுகாப்பு..!

’நியூட்ரினோ ஆய்வக அமைவிடம்’ : கேள்விக்குறியாகும் புலிகளின் பாதுகாப்பு..!

ஆம்லெட் விலை உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வு காரணமா? - பாஜக பேச்சாளரின் விநோத விளக்கம்..!

ஆம்லெட் விலை உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வு காரணமா? - பாஜக பேச்சாளரின் விநோத விளக்கம்..!

டாப் நியூஸ்

”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

“ரகிட ரகிட” பாடல் எங்கே ஷூட் செய்யப்பட்டது தெரியுமா ? மனம்திறந்த சந்தோஷ் நாராயணன்!

“ரகிட ரகிட” பாடல் எங்கே ஷூட் செய்யப்பட்டது தெரியுமா ? மனம்திறந்த சந்தோஷ் நாராயணன்!

மரத்தில் ஏறி மனதை இறக்கும் நடிகை ஷாலு ஷம்மு!

மரத்தில் ஏறி மனதை இறக்கும் நடிகை ஷாலு ஷம்மு!