மேலும் அறிய

மயிலாடுதுறை: முதியோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்! பிப்ரவரி விநியோக தேதி அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்க பிப்ரவரி மாதத்திற்கான விநியோகத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே சென்று, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் இந்த விநியோகப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான விநியோகத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 22,819-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் கடும் மழையில் மற்றும் சிரமமான பயணத்தைத் தவிர்த்து நிம்மதி அடைந்துள்ளனர்.

தாயுமானவர் திட்டம்: ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அரசு, வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொருட்களைப் பெற முடியாமல் சிரமப்படும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் "தாயுமானவர் திட்டத்தை" அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாகப் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று, குடிமைப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் நேரடிப் பார்வையில், இந்த விநியோகம் முறையாக நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

22,819-க்கும் மேற்பட்டோர் பயனடைகின்றனர்

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தில் மொத்தம் உள்ள 442 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 22,819 வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய சிரமமின்றி, ரேஷன் கடைப் பணியாளர்கள் மூலம் தங்களின் வீடுகளிலேயே அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். இந்த இல்லம் தேடி ரேஷன் பொருள் விநியோக முறை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைப் பெருமளவு குறைத்துள்ளது.

மாதாந்திர விநியோக முறை

வழக்கமாக, இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் ரேஷன் கடைப் பணியாளர்கள் வாகனங்களில் குடிமைப் பொருட்களை ஏற்றிச் சென்று, பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று விநியோகம் செய்து வருகின்றனர்.

இந்த விநியோகமானது, பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய, முறையான பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு, கையெழுத்து அல்லது கைரேகை மூலம் விநியோகம் நிறைவு செய்யப்படுகிறது.

டிசம்பர் மாதம் பொருட்கள் 

தற்போது பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விநியோகத் தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக, இந்த பிப்ரவரி மாதத்திற்கான குடிமைப் பொருள் விநியோகமானது, வரும் பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை) நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், இந்த பிரிவில் 2 மற்றும் 3-ம் தேதிகளில் ரேஷன் பொருட்களைத் தங்களின் வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சுயமரியாதையுடனும், சிரமமின்றியும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்வதாக மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
விஜய்யை வெற்றி பெற வைத்த இளைஞர்களின் நம்பிக்கைக்கு துரோகம் - தவெக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!
விஜய்யை வெற்றி பெற வைத்த இளைஞர்களின் நம்பிக்கைக்கு துரோகம் - தவெக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
Embed widget