மேலும் அறிய

இளைஞர்களே விண்ணப்பம் செய்ய மே 3 கடைசி நாள்.. எதற்கு தெரியுமா..?

இளைஞர்களின் சமூக சேவையை அங்கீகரிக்கும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது - 2025 விண்ணப்பம் செய்ய மே 3 -ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தன்னார்வமாக பங்களித்து வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" எனும் பாராட்டு விருதை வழங்கி கௌரவித்தது வருகிறது. அந்த வகையில் 2025 -ஆம் ஆண்டிற்கான இவ்விருது, வருகிற ஆகஸ்ட் 15 -ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் 

இந்த விருது, சமூக சேவைகளில் தலைசிறந்த சாதனைகளை புரிந்த 15 வயது முதல் 35 வயது வரையிலான 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை விருதுடன் வழங்கப்படும்.

விருது வழங்குவதன் நோக்கி 

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்படுவதற்கான நோக்கங்கள் பல. இளைய தலைமுறையில் சமூக பொறுப்புணர்வை ஊட்டுவதுடன், அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குவதை வலியுறுத்துகிறது. இளம் தலைமுறையை சமூகத் தொண்டுகளுக்கு ஊக்குவிப்பது, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து எதிர்கால தலைவர்களாக உருவாக்குவது என்பனவும் முக்கிய குறிக்கோள்களாக உள்ளன.

CMBT TN Govt: கோயம்பேட்டில் வரப்போவது என்ன? குத்தம்பாக்கம் ரெடி - புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது?

விருதிற்கான தகுதிகள்

விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண்/பெண் இளைஞர்கள், 01.04.2024 அன்று குறைந்தது 15 வயதையும், 31.03.2025 அன்று அதிகபட்சம் 35 வயதையும் உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் (சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்).

2024-2025 ஆம் நிதியாண்டில் (01.04.2024 முதல் 31.03.2025 வரை) மேற்கொள்ளப்பட்ட சமூக சேவைகள் மட்டுமே பரிசீலனைக்குட்படுகின்றன. இந்தச் சேவைகள் தனிநபரின் தன்னார்வச் செயற்பாடுகளாகவும், சமூகத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள். மேல் விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள், தாங்கள் வசிக்கும் சமூகத்தில் நல்ல மதிப்பை பெற்றவர்கள், சமூக நலனுக்காக தொண்டு செய்தவர்களாக இருக்க வேண்டும்.

Tahawwur Rana: ”தொட்டவன விட்டதா இல்லை” தஹாவூர் ராணாவை தட்டி தூக்கிய இந்தியா - மும்பை தாக்குதல் விவகாரம்

விண்ணப்பிக்கும் முறை

விருதுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2025, மாலை 4.00 மணி வரை. மேலும், விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்தவாறும், விண்ணப்பத்தின் மூன்று நகல்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்களுக்கான வாய்ப்பு

இம்முறையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், தாங்கள் மேற்கொண்ட சமூக சேவைகளை ஆதாரங்களுடன் விவரித்து, விருதுக்காக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொலைபேசி எண்: 7401703459 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கும் இந்த விருது, அவர்களின் செயல்களில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி, சமூகத்தில் நேர்மையும், நல்லிணக்கமும் விரிவடையக் காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை. எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs SA Test: வரலாறு காணாத மாபெரும் தோல்வி - 140 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த தெ.ஆ.,
IND Vs SA Test: வரலாறு காணாத மாபெரும் தோல்வி - 140 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த தெ.ஆ.,
Sengottaiyan: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
Gold Rate Nov.26th: இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA Test: வரலாறு காணாத மாபெரும் தோல்வி - 140 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த தெ.ஆ.,
IND Vs SA Test: வரலாறு காணாத மாபெரும் தோல்வி - 140 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த தெ.ஆ.,
Sengottaiyan: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
Gold Rate Nov.26th: இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
Cyclone Senyar: உருவான ‘சென்யார்‘ புயல்; தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்கா.? வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன.?
உருவான ‘சென்யார்‘ புயல்; தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்கா.? வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன.?
IND Vs SA Test: சொந்த காசில் சூனியம்.. ஸ்பின் ஆட தெரியாமல் முழிக்கும் இந்திய அணி, உள்ளூரில் பெரிய அவமானம்
IND Vs SA Test: சொந்த காசில் சூனியம்.. ஸ்பின் ஆட தெரியாமல் முழிக்கும் இந்திய அணி, உள்ளூரில் பெரிய அவமானம்
Top 10 News Headlines: புதுச்சேரி செல்லும் விஜய், உருவான சென்யார் புயல், ஐ.நா வெளியிட்ட திடுக்கிடும் அறிக்கை - 11 மணி செய்திகள்
புதுச்சேரி செல்லும் விஜய், உருவான சென்யார் புயல், ஐ.நா வெளியிட்ட திடுக்கிடும் அறிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget