Labor Day Wishes: ”உன் கையை நம்பி உயர்ந்திட பாரு..” உழைப்பாளர் தினத்திற்கு வாழ்த்து மழை பொழிந்த அரசியல் கட்சி தலைவர்கள்!
இன்று மே தினம் கொண்டாடப்படும் நிலையில் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தின கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து..!
உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் “மே தின” வாழ்த்துச் செய்தி pic.twitter.com/ictCSSB1pl
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 30, 2024
இன்று மே தினம் கொண்டாடப்படும் நிலையில் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
"ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!"
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 1, 2024
உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!… pic.twitter.com/dUw4nGsoOE
"ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!" உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்! அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:
மே 1 - உலகத் தொழிலாளர் நாள்:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 30, 2024
------------------
தொழிலாளர் விரோத ஃபாசிச மோடி அரசை வீழ்த்திட உறுதியேற்போம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
~~~~~~~~~~~~~
உலகத் தொழிலாளர்கள் கொண்டாடும் உன்னதநாளான
மே நாளில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த யாவருக்கும் விசிக சார்பில் எமது… pic.twitter.com/flyko3ElJf
உலகத் தொழிலாளர்கள் கொண்டாடும் உன்னதநாளான மே நாளில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த யாவருக்கும் விசிக சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தமது குருதியைக் கொட்டிய - இன்னுயிர் நீத்தப் போராளிகள் அனைவருக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். 'எட்டுமணி நேர வேலை' என்பது உழைப்போரின் உரிமை என நிலை நாட்டிய புரட்சிகர வரலாற்றினைப் போற்றும் நாளாகவே இந்த மே நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை:
மே தின வாழ்த்துச் செய்தி
— Selvaperunthagai K (@SPK_TNCC) April 30, 2024
கடந்த 138 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இதே மே 1 ஆம் தேதி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர்… pic.twitter.com/1nx13jKsBi
மே தின வாழ்த்துச் செய்தி கடந்த 138 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இதே மே 1 ஆம் தேதி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க.வின் தொழிலாளர் விரோத போக்கு இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜி.கே வாசன் எம்.பி வாழ்த்து:
அனைத்து விதமான தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கான சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் - மே - 1 தொழிலாளர் தினம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து:
உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று. உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.