மேலும் அறிய

மணப்பெண்ணை அடித்ததால் நின்று போன திருமணம் - 7 லட்சம் இழப்பீடு கேட்டு மணமகன் போலீசில் புகார்

’’ஏன் இது போல் நடந்து கொள்கிறாய் என்று கேட்டதற்கு மணப்பெண்ணின் வீட்டார் இப்பொழுதே இவ்வாறு பேசுகிறாயா என கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு என்னை அடித்தனர்’’

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்து திருமணம் நாள் குறிக்கப்பட்டது அதன் பேரில், நேற்று முன்தினம் காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது, அப்பொழுது திருமணத்தில் டிஜே நிகழ்ச்சிக்கு பெண் விட்டார்கள் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் பெண் அழைப்பு முடிந்து திருமண மண்டபத்தில் மணமகள் மற்றும் மணமகள் உறவினர்கள் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்து உள்ளனர்.
 
அப்பொழுது மணமகள் விட்டார்கள் மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மணமகன் மற்றும் மணப்பெண் பாடலுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தபோது உறவினர் ஒருவர் மணப்பெண் மேல் கை வைத்து நடனம் ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் மேடையில் அமர்ந்துள்ளார். பின்னர் மணமகன் உடனடியாக மணப்பெண்ணிடம் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இதனால் இரு குடும்பங்களிடையே மோதல் ஏற்பட்டு திருமண மண்டபத்தில் இருந்து மணமகள் வெளியேறினார்.

மணப்பெண்ணை அடித்ததால் நின்று போன திருமணம் - 7 லட்சம் இழப்பீடு கேட்டு மணமகன் போலீசில் புகார்
 
பின்னர் மணமகன் மணப்பெண்ணை அறைத்ததாக கூறி, உடனே மணப்பெண்ணின் முறை மாமனுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருமணம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து மணமகன் ஸ்ரீதர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து திருமண மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது என்னையும் ஜெய்சந்தியாவையும் நடனம் ஆடச் சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர்.
 
மணப்பெண்ணை அடித்ததால் நின்று போன திருமணம் - 7 லட்சம் இழப்பீடு கேட்டு மணமகன் போலீசில் புகார்
 
அப்பொழுது பெண் வீட்டு உறவினர் ஒருவர் மணப்பெண்ணு கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது ஏன் இது போல் நடந்து கொள்கிறாய் என்று கேட்டதற்கு மணப்பெண்ணின் வீட்டார் இப்பொழுதே இவ்வாறு பேசுகிறாயா என கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு என்னை அடித்தனர்.  மேலும் எனக்கும் மணப்பெண் ஜெயசந்தியாவை தொடர்புகொள்ள முடியாதபடி செய்து, தற்பொழுது மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மணப்பெண்ணை அடித்ததால் நின்று போன திருமணம் - 7 லட்சம் இழப்பீடு கேட்டு மணமகன் போலீசில் புகார்
 
இதனால் நானும் எனது குடும்பமும் உறவினர்களும் மனவேதனை அடைந்து உள்ளோம், மேலும் திருமணம் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எங்களுக்கு ரூபாய் 7 லட்சம் செலவாகி உள்ளது, இவ்வாறு திருமணம் பாதியில் நின்றதால் எனது வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகிவிட்டது. ஆகையால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
HVF Avadi Recruitment: பி.இ. பட்டம், டிப்ளமோ பெற்றவரா? கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?
பி.இ.பட்டம், டிப்ளமோ பெற்றவரா? கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
HVF Avadi Recruitment: பி.இ. பட்டம், டிப்ளமோ பெற்றவரா? கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?
பி.இ.பட்டம், டிப்ளமோ பெற்றவரா? கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
Embed widget