கல்லூரி வாழ்க்கை, விடுதி வாழ்க்கை பொற்காலம் கிடைக்கவே கிடைக்காது - கவிஞர் அறிவுமதி
நம்முடைய நாடு மக்களாட்சியில் நாம் அனைவரும் மன்னர்கள் அதை நாம் முதலில் நினைவு கொள்வோம். ஒரு மன்னர் இப்படி எல்லாம் செய்துள்ளார்கள் என்று திரைவடிவில் முதலில் காட்டி இருக்கிறார்கள் ஒரு சாதாரண மனிதன்.
மாணவர்களிடம் அறிவியல் தேடல் மற்றும் பகுத்தறிவுக்கான தேடல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பேசினார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் மரபு மற்றும் பண்பாட்டும் பரப்புரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் “பெண் கல்வியும் சமூக வாழ்க்கையும்” என்ற தலைப்பில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன், “உயிர்த் தமிழ்” என்ற தலைப்பில் கவிஞர்.திருமிகு அறிவுமதி அவர்களும் பரப்புரை வழங்கினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
இன்று நம்முடைய நாடு மக்களாட்சியில் நாம் அனைவரும் மன்னர்கள் அதை நாம் முதலில் நினைவு கொள்வோம். ஒரு மன்னர் இப்படி எல்லாம் செய்துள்ளார்கள் என்று திரைவடிவில் முதலில் காட்டி இருக்கிறார்கள். இந்த பழமை பெருமை பேசி நம் அழிந்து போகக்கூடாது என்று பாரதிதாசன் சொல்வார்கள். எனவே அதை இதையும் குழப்பிக்க கூடாது என்பதனை நாம் பல பேர் இதில் இருந்து புத்துணர்ச்சி பெற வேண்டும். நம்முடைய நம் தாய் நாடு தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கால மன்னர் காலத்தில் உள்ள மக்கள் அனைவரும் நாகரிகத்துடனும் பகுத்தறிவுடனும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாம் என்ன எதிர்பார்க்கிறோம் அப்படி என்றால் நம் மாணவர்களிடம் ஒரு அறிவியல் தேடல் பகுத்தறிவுக்கான தேடல் கண்டிப்பாக வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதாவது நம்முடைய தமிழ்நாடு பண்டைய காலத்தில் இருந்து சமகால வரலாற்றில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு உள்ளான வரலாற்றில் பின் தங்கிய நிலையில் கல்வி அறிவு குறைவாக இருக்கக்கூடிய மாநிலம் சீரிய முயற்சியினால் நம்முடைய வாழ்க்கை தரம் எவ்வாறு மேம்பட்டு உள்ளது. சமூக நீதி எவ்வாறு நிலை நாட்டப்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும் அதனை உணர்ந்து நாம் யார் நம்ம மாநிலத்தில் ஏன் நம் மாநிலம் தனி சிறப்பு வாய்ந்தது நம் மொழி தனி சிறப்பு வாய்ந்தது என்று நாம் உணர வேண்டும். இதை நான் ஒரு மாவட்ட ஆட்சியராக சொல்லவில்லை நான் நம்முடைய மாநிலத்தில் உள்ள இந்த சமூக நீதி மற்றும் கல்வி குறித்த கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்ற விஷயங்களால் மட்டுமே என்னுடைய குடும்பமும் சரி நானும் சரி இந்த நிலை அடைந்திருக்கிறேன். அதாவது நாம் எல்லோரும் மன்னர்கள் நம்ம நாட்டில் யார் வேண்டுமென்றால் படித்தால் இந்த நிலைமைக்கு வர முடியும் யார் வேண்டுமென்றாலும் எந்த பதவிக்கும் வர முடியும். ஆனால் நாம் மாநிலத்தில் அனைவருக்கும் இந்த வாய்ப்பை வழங்கக்கூடிய சமதளத்தை அழைக்கக்கூடிய மிகச்சிறந்த அளவில் உள்ளது. வெற்றியடைய வேண்டும் என்றால் முக்கியமாக இளம் தலைமுறை இளைஞராகிய நீங்கள் இந்த விஷயத்தை உணர வேண்டும். அதற்கு தான் இது ஒரு தூண்டலாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்த நிகழ்ச்சி இதற்காகவே ஐயா இருவரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த மாவட்டத்தில் இருந்து வருகை தந்திருக்க கூடிய அறிஞர்களை எமது மாணவர்களை சிறப்பான முறையில் வழிநடத்தி அவர்களின் அறிவை செம்மைப்படுத்த புத்துணர்ச்சி பெற்று மற்றும் எழுச்சி பெற்ற மாணவர்களாக மேம்படுத்தி செல்வார்கள் கண்டிப்பாக இந்த மாணவர்கள் சிறந்த மாணவர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
பெண் கல்வியும் சமூக வாழ்க்கையும்” என்ற தலைப்பில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் பேசுகயில்,
இளமையில் தான் அனுபவித்த துயரங்களை தெருக்களில் பேசும் ஒரு சாதாரண மனிதன். தமிழ் தான் எனது தாழ்வு மனப்பான்மையினை தனர்த்தி என் உணர்வை மென்மேலும் தூண்டியது தமிழ்தான் என்பதில் பெருமைக் கொள்கிறேன்.. தமிழ்நாட்டில் இயற்கை வளங்களை எடுத்து செல்ல கடல் வழியை கண்டுபிடிக்க வேண்டும் என உலகத்தின் கனவாக இருந்தது. குமரிமுனை, குமரிக்கண்டம் நாகர்கள் தமிழர்கள் மூத்த குடி என்பது நமக்கு தொண்மையினை உணர்த்துகிறது.
சிந்து சமய நாகரிங்களால் நமது தமிழ் கட்டமைக்கப்பட்ட நாகரீகமாக திகழ்ந்து வருகின்றது. அதற்கும் நமது தாய்மொழி தமிழ் தான் காரணம். ஆண்களின் வரலாறு தான் உலக வரலாறாக என கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பெண்களை மையமாகக் கொண்டு ஐம்பெரும் காப்பியங்களில் மூன்று காப்பியங்கள் அதாவது சிலப்பதிகாரத்தில் கண்ணகியையும், மணிமேகலையில் மணிமேகலையும், குண்டலகேசி காவியத்தில் குண்டலகேசியும் மையமாகக் கொண்டு பெண்களின் காவியத்தை தீட்டப்பட்டுள்ளது. இதில் மூன்றில் பெண்களே காவியமாக கருதப்படுகின்றன. கடந்த காலங்களில் நடைபெற்ற வாழ்வியல் முறையும் தற்போது வாழ்வியல் முறை மாறிவரும் வாழ்வினை முறைகளையும் சமப்படுத்தி சமத்துவ படுத்த மாணவ மாணவியர்கள் ஆகிய நீங்கள் தான் முன்வர வேண்டும் என திருமிகு.சிந்தனைச் செல்வன் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
தொடர்ந்து கவிஞர் திருமிகு அறிவுமதி “உயிர்த் தமிழ்” என்ற தலைப்பில் பேசுகையில்,
உங்களுடைய கல்லூரி வாழ்க்கை, விடுதி வாழ்க்கை அது போன்ற பொற்காலம் கிடைக்கவே கிடைக்காது. அதனால் இந்த நட்பு இந்த கல்வி காலத்தில் நீங்கள் காகிதங்களை கடந்து நண்பர்களாக மாற வேண்டும். மதங்களைக் கடந்து நண்பராக ஆக வேண்டும் நீங்கள் உலக உயிர்களோடு ஒருவர் என்ற உணர்வோடு ஒன்று பட வேண்டும் என்று சொல்லி என்னை முதன்முதலாக பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருப்பீர்கள் ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று கேட்டால் கட்டாயம் தெரிந்திருக்கும் என் முகத்தை மட்டும் தான் இன்றைக்கு பார்த்திருக்கிறீர்கள் ஆனால் எனது சில பாடல்களை சொன்னால் உங்களுக்கு ஓஹோ இதையெல்லாம் எழுதியது நீதானா என்ற ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு தோன்றலாம். சேது திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா உடைய குரலில் “எங்கே செல்லும் பாதை” என்ற பாடலை எழுதியிருக்கிறேன் இதுபோல பல திரைப்பட பாடல்களை பாடி இருக்கின்றேன்.
ஐயா இறையன்பு கேட்டுக் கொண்டதுக்கிணங்க நான் எழுதிய இரண்டு ஹைக்கூ” 1)இரண்டு அடி கொடுத்தால் தானே திருந்துவாய், இரண்டு அடி கொடுத்தால் தானே திருந்துவாய் ,வாங்கிக்கொள் வள்ளுவனிடம், 2) எத்தனை முறை உரை ஊற்றி ஊற்றி பார்த்தாலும் புளிக்காத பால் “முப்பால்” வள்ளுவனின் அந்த அறிவு ஆசானின் அந்த நிமிர்ந்த தமிழ் எழுத்து தான் உங்களிடம் நான் நிமிர்ந்து நிற்கிறேன். மன தமிழ் உறுதியோடு நிற்கிறேன் கல்வி எதற்கு வேண்டும், எழுத்து எதற்கு வேண்டும், கணக்கு எண் என்றால் என்ன கணக்கு தானே அவனைப் போன்ற ஒரு அறிவாளி உலகத்தில் எந்த மொழியில் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதற்காக இரண்டு குறள்கள் இந்த எண் எதற்காக, இந்த எழுத்து எதற்காக என்று கேட்கின்ற போது வள்ளுவன் ஆசான் சொல்லுகின்றான் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கே என்ன வள்ளுவன் வகுத்த குறள்களை கூறி மாணவ மாணவர்களிடம் கருத்துரை வழங்கினார்கள்.
இரண்டு சொற்பொழிவாளர்கள் சொற்பொழிவாற்றிய கருத்துரையில் இருந்து மாணவ. மாணவியர்கள் சிறப்பாக கேள்வி கேட்ட மாணவ, மாணவியர்களுக்கு கேள்வி நாயகன், கேள்வி நாயகி விருதுக்கான கேடயங்களும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட தமிழ்ப் பெருமிதம் புத்தகத்திலிருந்து இரண்டு சொற்பொழிவாளர்கள் வினா எழுப்பிய போது சரியாக விடை அளித்த மாணவ, மாணவிகளுக்கு பெருமித செல்வன், பெருமித செல்வி என்ற பெயர்களில் விருதுகளை சிறப்பு விருந்தினர்கள் கேடயங்கள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
அரங்கில் கல்வித்துறையில் சார்பாக நான் முதல்வன் திட்டம் குறித்தும், மகளிர் திட்டம், கல்வி கடனுதவி தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி, தொழில் வழிகாட்டல் தொடர்பாக மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட மைய நூலகம் சார்பில் புத்தக கண்காட்சியும் போன்ற கண்காட்சி அமைக்கப்பட்டது.