![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: புரோட்டாவுக்கு 'சூரி'னா, ஆம்லெட்டுக்கு நான்.! அசால்டாக 50 ஆம்லெட் சாப்பிட்டு ஏப்பம் விட்ட நபர்!
ஒரே நபர் 50 நாட்டு கோழி முட்டை ஆம்லெட்களை சாப்பிடும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
![Watch Video: புரோட்டாவுக்கு 'சூரி'னா, ஆம்லெட்டுக்கு நான்.! அசால்டாக 50 ஆம்லெட் சாப்பிட்டு ஏப்பம் விட்ட நபர்! Man eating 50 omelettes in one go and netizens can't keep calm –viral video Watch Video: புரோட்டாவுக்கு 'சூரி'னா, ஆம்லெட்டுக்கு நான்.! அசால்டாக 50 ஆம்லெட் சாப்பிட்டு ஏப்பம் விட்ட நபர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/1cab4d2d7e99e0a4d2322964a9179580_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமூக வலைதளங்களில் எப்போதும் உணவு தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக உணவு ரிவ்யூ அல்லது உணவு தொடர்பான சவால் வீடியோக்கள் என்றால் அது நிச்சயம் வைரலாகும். அந்தவகையில் தற்போது ஒருவர் 50 நாட்டு கோழி முட்டை ஆம்லெட்களை சாப்பிடும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
சாப்பாட்டுராமன் என்று பிரபலமானவர் பொற்செழியன். அதிகமான சாப்பாட்டை சாப்பிட்டு வைரலானவர். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஒரே நபராக 50 நாட்டு கோழி முட்டை ஆம்லெட்களை அடுத்தடுத்து சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ கடந்த 13ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இதை தற்போது வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் 2.4 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இதேபோல் சாப்பாட்டுராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 36 நெய் தொசைகளை சாப்பிட்டு அசத்தியுள்ளார். அது தொடர்பான வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் வேகமாக வைரலானது.
View this post on Instagram
தற்போது அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் ஆம்லெட் சாப்பிடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிரிட்டிஷ் அரசை எதிர்த்த முதல் ராணி வேலுநாச்சியார்தான்.. ரஜினி டயலாக்கில் கனிமொழி வெளியிட்ட வீடியோ..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)