(Source: ECI/ABP News/ABP Majha)
Save Soil Sadhguru Isha : மண்ணை காப்பாத்துங்க.. இல்லன்னா வருங்கால சந்ததி மன்னிக்காது - மஹாசிவராத்திரி விழாவில் பேசிய சத்குரு
தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வந்தாலும், கோவையில் உள்ள ஈஷா மஹாசிவராத்திரிதான் கடந்த சில ஆண்டுகளாக அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
savesoil.org என்ற இணையதளத்தை தொடங்கி உள்ளோம். நாம் அனைவரும் சேர்ந்து இந்த மண்ணை காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்திருக்கிறார் சத்குரு
சிவபெருமானின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த மஹாசிவராத்திரி பண்டிகை இந்த ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பான நாளாக அமையும். அதன் அடிப்படையில், மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய நாள் மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வந்தாலும், கோவையில் உள்ள ஈஷா மஹாசிவராத்திரிதான் கடந்த சில ஆண்டுகளாக அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டு கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இன்று இரவு விடிய விடிய சிவனுக்கு ஆராதனை செய்யப்பட்டு, இசை சங்கமம் முழுங்க பெரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு உற்சாகத்தினை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ் “நாட்டில் உணவு இல்லாமல் போனது என்றால், உலகமே மூன்று நாளில் முடிந்துவிடும். இந்த நிலையை தவிர்க்க, உலகம் முழுவதும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க உள்ளோம். கடந்த 8 மாதங்களாக பல நாட்டு தலைவர்களை சந்தித்து இது பற்றி பேசி இருக்கிறோம். இந்த மண்ணை சத்தாக வைத்திருக்க மாதிரியான சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்காக savesoil.org என்ற இணையதளத்தை தொடங்கி உள்ளோம். நாம் அனைவரும் சேர்ந்து இந்த மண்ணை காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்
Mahashivaratri is a celebration of Consciousness. All Energy evolves from this Consciousness; all Life evolves from soil. Re-establishing our connection with soil is the first step towards becoming a Conscious Life & experiencing the Cosmic nature of Oneness. –Sg#MagicOfSoil pic.twitter.com/4rtHd8VZ6V
— Sadhguru (@SadhguruJV) March 1, 2022
All of Us Come from Soil, Feed Upon Soil, and Go Back to Soil.#DailyWisdom #SaveSoil pic.twitter.com/Ki68dhSf15
— Sadhguru (@SadhguruJV) February 25, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்