ஹெலிகாப்டர் சகோதரர் கணேஷுக்கு நிபந்தனை ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் அரசு இன்னும் ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை? என நீதிபதி கேள்வி
ஹெலிகாப்டர் சகோதரர் என்று அழைக்கபடும் கும்பகோணத்தை சேர்ந்த கணேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர். தற்போது வரை சிறைக் காவலில் இருந்து வருகிறேன். இந்த வழக்கில் 12 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொங்கலுக்காக பனங்கிழங்கில் தயாராகும் தித்திக்கும் திகட்டாத தின்பண்டங்கள்...!
இந்த வழக்கு இன்று நீதிபதி தாரணி முன்பாக விசாரணைக்கு வந்தது, அரசு தரப்பில், "பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே, ஜாமின் வழங்க கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி நிதி நிறுவன மோசடி வழக்கில் இன்னும் ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கணேஷுக்கு, தினமும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் மற்றொரு சகோதரர் சுவாமிநாதனுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்க சொன்னதாக பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து