"ஒவ்வொரு கொடிக் கம்பத்திற்கும் ரூ. 1000 வசூல் செய்யுங்க" சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
பொது இடங்களில் புதிதாக கொடிக் கம்பம் வைக்க ஒவ்வொரு கம்பத்திற்கும் தலா ரூ.1000 கட்டணம் வசூல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
"ஒவ்வொரு கொடிக் கம்பத்திற்கும் தலா ரூ.1000 வசூல்"
கடந்த ஜூலை 2ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலையின் நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், "பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு ரூ 1000 கட்டணமாக வசூலிக்க வேண்டும். பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் வாடகை வசூல் செய்ய வேண்டும்" எனக் கூறியது.
சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி:
தமிழகம் முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்றக் கூடிய வழக்கு ஜூலை இரண்டாம் தேதிக்கு தள்ளி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்களை அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள திமுக கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை அகற்றக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்திருந்தார். இதை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்தது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்" என்றார்.
இதையும் படிக்க: FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!





















