Pubg madan: பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு!
பப்ஜி மதனின் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
![Pubg madan: பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு! Madras HC quashes Goondas order against pubg madan Pubg madan: பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/25/b8603b972f0ba9a76007b8bb57220b7b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பப்ஜி என்ற இணையதள விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டு மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரது மனைவி கிருத்திகாவை மட்டும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மதன் தற்போது சிறையில் உள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், பப்ஜி மதனின் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த விஷயத்துக்கு லண்டன்தான் நம்பர் 1 இடமா..! அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வு முடிவு..
சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ நேரடி பேரம் பேசப்பட்டு, அதற்காக மதன் மனைவியிடம் 25 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் லஞ்சமும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைக்காவலர் ஒருவர், மதன் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பப்ஜி மதன் கைதின் போது, ஜாமினில் வந்த அவரது மனைவி கிருத்திகாவிடம், ‛சொகுசு கார் எப்படி வந்தது’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த கிருத்திகா, ‛தங்களிடம் எந்த சொகுசு காரும்... இல்லை என்றும், ஆடி கார் மட்டுமே உள்ளதாக’ பதிலளித்தது, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதன் பின் தன்னை பார்க்க வந்த மனைவியிடம், ‛சொகுசு கார் இல்லை என்று சொல்லாதே... நம்மிடம் இருப்பது சொகுசு கார் தான்’ என மதன் கூறியதும் நடந்தது.
காரில் சொகுசு இல்லை என்று கூறிய கிருத்திகா, தன் கணவரின் சொகுசுக்காக சிறைகாவலரிடம் பேரம் பேசி, அதற்காக பணமும் அனுப்பியுள்ளார். முன்னதாக, குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
"தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்... அதில் தமிழ் கட்டாயம்" - பள்ளிக் கல்வித்துறை அதிரடி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)