மேலும் அறிய

Ration Card: ரேஷன் கார்டுகளில் இது கட்டாயம்.! இல்லையென்றால் பெயர் நீக்கம்- கெடு விதித்த கூட்டுறவுத்துறை

Ration Card: ரேஷன் கார்டுகளில் இறந்த நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில் ரேசன் கார்டுகளில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகை பதிவினை உறுதி செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகள்- மானிய விலையில் உணவு

தமிழகம் முழுவதும்  34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் இலவசம் மற்றும் மானிய விலையில்  2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டுகளில் மின்னனு ரேஷன் கார்டு அறிமுகமானதற்கு பிறகு, குடும்பத் தலைவர் கைரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கி வந்தனர். இதனையடுத்து ரேஷன் கார்டுகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் உண்மையான மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 

ரேஷன் கார்டுகளில் போலியான நபர்கள்

அந்த வகையில் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவர் மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ரேஷன் கார்டில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவுத் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் போலியான நபர்களை கண்டறியும் வகையில் கைரேகை பதிவு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. மேலும் விரல் ரேகை இல்லாததும் தொடர்ந்து சிலர் பயன்பெற்று வருகின்றனர். இதை தடுக்க ஆதார் எண் இணைக்கவும், விரல்ரேகையை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேசிய உணவுப் பாதுவாப்புச் சட்டம் 200ன் படி முன்னுரிமை PHH மற்றும் அந்தியோதயா அன்னயோஜனாAAY குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள அணைத்து sedut(KYC) 100% நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அனைத்து மண்டலங்களிலிருந்தும் பெறப்பட்ட இறந்த நபர்களின் பட்டியலில் (death list) உள்ள பெயரினை பொதுவிநியோகத்திட்ட தரவுத் தொகுப்பிலிருந்து நீக்கம் செய்யுமாறு உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகரியோர் பாதுகாப்புத்துறை கேட்டுக்கொள்ளப்பட்டது.

ரேஷன் கார்டுகளில் ஆதார் கட்டாயம்

மேலும் நேர்முகக் கடிதத்தில் OASYS திட்ட ஒருங்கிணைப்பாளரால் இறந்த நபர்களின் பட்டியலில் (death list) பின்வரும் குறைபாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சில மாவட்டங்களில், குடும்ப அட்டை எண் மற்றும் இறந்த நபரின் பெயர் இடம்பெறவில்லை எனவும் இருந்த நபரின் பெயரானது ஆங்கிலத்தில் முழுமையாக பதிவு செய்யப்படாமல் சில இடங்களில் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆதார் எண்விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் பெயர் நீக்கம்

எனவே இறந்த நபரின் ஆதார் எண்ணினை அனைத்து மண்டலங்களிலிருந்தும் பெற்று அவ்விவரத்தினை அனுப்பி வைக்கும் நேர்வில் மட்டுமே. இறந்த நபரின் பெயரினை பொது விநியோகத்திட்ட தரவுத் தொகுப்பிலிருந்து நீக்கம் செய்ய இயலும் எனவும், இறந்த நபரின் பெயரினை பொது விநியோகத்திட்ட தரவுத் தொகுப்பில் உள்ளவாறு ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே PHHமற்றும் AAY குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளிகளின் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) 100% நிறைவேற்றுவதற்கு இறந்த நபர்களின் விவரங்களை சரியான ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட படிவத்தில் (ஆங்கிலத்தில் மட்டும்) பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget