Margazhiyil Makkalisai: 'மார்கழியில் மக்களிசை’ குறித்து பொய் தகவல் - சமூக விரோதிகளின் மீது புகார் அளிக்கப்படும் - ஒருங்கிணைப்புக் குழு
‘மார்கழியில் மக்களிசை’ 2021 டிசம்பர் ஆம் தேதி மதுரையில் துவங்கி கோவை மற்றும் சென்னையில் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
'மார்கழியில் மக்களிசை’ நிகழ்வு குறித்து இணையத்தில் பொய் தகவல்களை பரப்பிவிடும் சமூக விரோதிகளின் மீது சட்டப்படி புகார் அளிக்கப்படும் என்று அதன் ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது.
சினிமாவில் தான் நினைத்த அரசியல், பிரச்னைகளை ஆழமாக பேசி வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். அத்துடன் கலை, இலக்கியத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், தான் தொடங்கிய நீலம் பண்பாட்டு மையம் மூலம் மார்கழி மாதத்தில் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். முதலில் இந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. இந்தாண்டு மதுரை மற்றும் கோவையில் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் கடந்த 18ஆம் தேதி ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டனர். பாடகர் தெருக்குரல் அறிவு, இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கொண்ட குழுவினர் இதை ஒருங்கிணைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தாரை தப்பட்டை, மேளம்,, கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் என தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டார்.
இதனிடையே, இந்த நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில், இதுதொடர்பாக அந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கலை மக்களுக்கானதே..!
அதை மக்களிடமே கொண்டு செல்வோம் என்ற நோக்கோடு,'மார்கழியில் மக்களிசை’ 2021 டிசம்பர் ஆம் தேதி மதுரையில் துவங்கி கோவை மற்றும் சென்னையில் 31ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்களிசை கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்நிகழ்வு குறித்து இணையத்தில் பொய் தகவல்களை பரப்பிவிடும் சமூக விரோதிகளின் மீது சட்டப்படி புகார் அளிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official statement about defamatory and fake news being spread about Margazhiyil Makkalisai 2021.#MargazhiyilMakkalIsai2021 #makkalisai2021 pic.twitter.com/sFihaEdz9F
— Margazhiyil Makkalisai (@makkalisai) December 22, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்