மேலும் அறிய

EPS Statement: 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூர் பெருவெளியில் அமைக்கக்கூடாது - எடப்பாடி பழனிசாமி அறிக்கை..

'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூர் பெருவெளியில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூர் பெருவெளியில் அமைத்தால், தைப்பூச தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றும், வடலூரிலையே வேறு இடத்தை தேர்வு செய்து கட்டமைக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பான அறிக்கையில், “கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உயர்ந்த ஆன்மீகக் கோட்பாட்டை உலகிற்கு அறிவித்தவர் வள்ளலார். அவர் தோற்றுவித்த சத்ய ஞான சபையில் மாத பூச வழிபாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், தைப்பூசத் திருநாளன்று லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள். வள்ளலார் தைப்பூசத் திருநாளில் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூசத் திருநாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்புசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்க தன்னெழுச்சியாகக் கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதைக் கண்டு, வள்ளலாரின் பொதுமை நோக்கத்தின் மீது அளவு கடந்த பற்றுகொண்ட வடலூர் பார்வதிபுரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்த நிலம்தான் 100 ஏக்கர் வடலூர் பெருவெளியாகும். இவ்வளவு பெரிய நிலம் இருப்பதால்தான் தைப்பபூசத்தன்று வடலூரில் கூடும் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளுக்கு முந்தைய நாளே ஜோதி வழிபாட்டிற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூர் பெருவெளியில் குவியத் தொடங்குவார்கள். தைப்பூசத் திருநாளில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் ஜோதி வழிப்பாட்டிற்காக கூடுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அடுத்த நாள் அதிகாலை, 6-வது 'ஜோதி வழிப்பாட்டின்' போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். அதற்கு அடுத்த நாள் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் 'திரு அறைக் காட்சி நாள்' என்பதால், மேலும் பல லட்சம் பக்தர்கள் 'திரு அறை தரிசனம்' காண கூடுவார்கள்.

இப்படி வருடத்தில் 4 முக்கிய நாட்களும் வடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது, பிற மாவட்டங்கள், வெளி மாநிலம், வெளிநாடு என்று சன்மார்க்க அன்பர்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடும் இடமாக வடலூர் பெருவெளி உள்ளது. இப்படி, விழாக் காலங்களில் கூடும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இப்படி லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை” கட்டுவதற்கு இந்த விடியா திமுக அரசு முனைந்துள்ளது அறிந்து இப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெருவெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.

இப்படி, இப்பெருவெளி நிலத்தை கையகப்படுத்தினால் 'மாத பூச வழிபாடும், தைப்பூச சிறப்பு வழிபாடும்' தடைபடும். தைப்பூசத் திருநாளன்று பக்தர்கள் எந்தவித சிரமுமின்றி அருட்பெரும் ஜோதியை தரிசிக்க அப்பகுதி கிராம மக்கள் மனமுவந்து அளித்த நிலத்தை இந்த திமுக அரசு வேறொரு பணிக்காக கையகப்படுத்த நினைப்பது, நிலத்தை தானம் செய்த மக்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான பக்தர்களின் மனதையும் வேதனைப்படுத்தி உள்ளது.

எனவே, திமுக அரசு வடலூர் பெருவெளியில் ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டுவதை விடுத்து, வேறொரு இடத்தைத் தேர்வு செய்து இம்மையத்தைக் கட்ட இந்த அரசுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தும், அவர்களது வேண்டுகோளை இந்த திமுக அரசு புறக்கணித்து, வடலூர் பெருவெளியிலேயே சர்வதேச மையம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரி உள்ளதாகத் தெரிகிறது.

'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார், தைப்பூசத் திருநாளில் அருட்பெருஞ்ஜோதியைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி காத்திருப்பதற்கு பொது வெளியை ஏற்படுத்தினார். அந்த பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget