கரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்
ஆட்டோக்களில் இருந்து கரும்புகையானது அதிகமாக வெளி வருகிறது. அதைத் தடுப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் முன்னிலையில் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகளில் உள்ள unauthorized cuts - ஐ முழுவதுமாக மூட வேண்டும். குளித்தலை ஆண்டார் பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளையும் அகற்றிடவும், கரூர் ஆண்டாள் கோவில் கிழக்கில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கரூர் - கோவை பிரதான சாலையில் அமைந்துள்ளதால் பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் அதிக அளவில் கடந்து செல்வதால், மேற்படி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சாலையினை கடக்க ஏதுவாகவும், மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு வேகத்தடை அமைக்கவும் நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளின் படி மதுரை - சேலம் பைபாஸ் சாலை சுக்காலியூர் மற்றும் செல்லாண்டிபாளையம் ஆகிய ஊர்களுக்கு பிரியும் சர்வீஸ் ரோட்டிற்கு குறியீட்டு போர்டு பொருத்துவது, பெரிய குளத்து பாளையத்திலிருந்து சேலம் பைபாஸ் சாலையில் நுழையும் போது ஏற்படும் வாகன நெருக்கடி மற்றும் யூடர்ன் செய்யும் போது ஏற்படும் வாகன நெருக்கடிகளும், இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கும் இந்தப் பகுதியில் கடந்து செல்லும்போது ஏற்படுகின்ற ஆபத்துகளும் இருப்பதால் அந்த இடத்தை போக்குவரத்து தடையில்லாமல் பாதுகாப்பாக செல்வதற்கு பாதுகாப்பு மேற்கொள்ளவும்.
குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கம் சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளின் படி, லோடு வேன்களில் பாதுகாப்பின்றி பயணிக்கும் கூலி தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கவும், ஆட்டோ மற்றும் டிராக்டர்களின் முன்புறம் உள்ள விளக்குகள் இரண்டு புறமும் நீட்டித்து வைக்கவும், சாலை ஓரத்தில் நிறுத்தும் அனைத்து வாகனங்களிலும் சிகப்பு, மஞ்சள் விளக்குகள் எரியவிட ஆணையிடவும், மேலும் ஆட்டோக்களில் இருந்து கரும்புகையானது அதிகமாக வெளி வருகிறது. அதைத் தடுப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக மேலாளர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்