தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வந்த இளம் பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்த அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் போலீசாரால் கைது

ஆசிரியர் காலிப் பணி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்னப்பள்ளி கிராமத்தில் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, திப்பனப்பள்ளி அருகே ஒண்டியனுார் கிராமத்தை சேர்ந்த திருப்பதி ( வயது 40 ) என்பவர் கணித பட்டதாரி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்ததால் பெண் ஆசிரியர் ஒருவர் பொறுப்பு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உதவியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் திருப்பதி , பள்ளிக்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால் , அந்த பணிக்கு விண்ணப்பிக்க 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் பள்ளியை அணுகி விசாரித்துள்ளார். இவர் தலைமையாசிரிருயக்கு அடுத்த படிநிலையில் உள்ளதால் , அவரை சந்தித்து காலிப் பணியிடம் குறித்து கேட்டுள்ளார்.
ஆபாச குறுஞ்செய்தி
அதையடுத்து தற்காலிக ஆசிரியர் பணிக்காக சூளகிரி பகுதியை சேர்ந்த அந்த பெண் விண்ணப்பத்தை கொடுத்து சென்றுள்ளார். பணி குறித்த தகவல் தெரிவிப்பதாக கூறி விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட ஆசிரியர் திருப்பதி, அவரது மொபைல் எண்ணையும் வாங்கி இருக்கிறார்.
பின்னர் பெண்ணின் எண்ணிற்கு , ஆபாச குறுஞ்செய்தி மற்றும் அப்பெண்ணை ஆபாசமாக வர்ணித்து குறுஞ் செய்திகளை, ஆசிரியர் திருப்பதி அனுப்பி அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார். தான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கண்டித்தும் தொடர்ந்து ஆபாச செய்திகளை அனுப்பி வந்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்படி, ஆசிரியர் திருப்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, ஆசிரியர் திருப்பதி விவகாரம் தொடர்பாக, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் நரசிம்மன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விரைவில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















