மேலும் அறிய

Kodanad Case: "மனநலம் பாதிக்கப்பட்ட தனபால் தன்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார்" - இளங்கோவன்

மனநலம் பாதிக்கப்பட்ட தனபால் தற்போது தான் பை கொடுத்ததாகவும், நாளை உங்களையும் கூறுவர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபால் தன்மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருவதாக கூறி, அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், கோடநாடு வழக்கு தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட தனபால் தன்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் தன்னிடம் பைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது. கனகராஜ் விபத்தில் உயிரிழந்த போது ஆத்தூரில் பேட்டியளித்த தனபால், தன்னை பற்றி எதுவும் கூறவில்லை. மேலும் கோடநாடு வழக்கில் எந்த பொருளும் கொள்ளை அடிக்கப்படவில்லை, எனது சகோதரர் கனகராஜுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் கூறி இருந்தார் என்றார்.

Kodanad Case:

ஆனால் தற்போது திமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனபாலிடம் தவறான தகவலை சொல்லி, அவர்கள் தூண்டுதலின் பேரில் என்மீது பொய்யான தகவலை ஊடகம் வாயிலாக கூறி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். கோடநாடு வழக்கு தொடர்பாக கனகராஜ் சகோதரர் தனபாலை ஊட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்நிலைத்தில் விசாரித்து சிறையில் அடைத்தனர். பின்னர் தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே என்னை விடுதலை செய்யுங்கள் என்று ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை படித்துப் பார்த்து நீதிபதி ஜாமின் மனு மீதான விசாரணை நடத்தி ஜாமினில் வெளியேவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட தனபால் தற்போது தான் பை கொடுத்ததாகவும், நாளை உங்களையும் கூறுவர். மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொன்றும் கூறுவார் எனவும் பேசினார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி தனது கணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் எங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார் கூறினார்.

Kodanad Case:

இதற்கு முன்பாக நில அபகரிப்பு வழக்கில் தனபால் கைது செய்யப்பட்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு தனபாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பெயரில், மனநலம் பாதிக்கப்பட்ட தனபால், தன்னைப் பற்றி தவறான தகவலை பரப்பி வருகிறார், எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார். இதற்கு முன்பாக கோடநாடு கொள்ளை வழக்கில் தனது சகோதரர் கனகராஜ் தலையிடவில்லை, அங்கு வேலைக்கு சென்று நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகிறது என்றும் கூறியிருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார். கோடநாடு விசாரணை தொடர்பாக கேள்விக்கு, கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து தற்பொழுது கருத்துக்கள் தன்னால் கூற முடியாது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget