கரூரில் கண்பார்வை மங்கி விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரால் பரபரப்பு
கரூர் பேருந்து நிலையம் அருகில் பிரபல தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கரூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையாக மேற்கொள்ளாத காரணத்தால் கண்பார்வை மங்கி விட்டதாக கூறி முதியவர் ஒருவர் கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் பேருந்து நிலையம் அருகில் பிரபல தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜி (71) என்ற முதியவர் கண்புரை நோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி அணுகியுள்ளார். மருத்துவமனை தரப்பில் அறுவை சிகிச்சைக்கு 15,000 ரூபாய் கட்டணமாக கேட்டுள்ளனர். கூலி வேலை செய்து வரும் முதியவருக்கு, திருமணம் ஆகாததால் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்று கூறி உள்ளார். அறுவை சிகிச்சைக்கு 13,000 ரூபாய் மட்டுமே தன்னால் தர முடியும் என்று கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கண் புரை நோய்க்கான அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும், சிகிச்சை முடிந்து அவருக்கு சொட்டு மருந்துகள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து முதியவருக்கு விடாமல் கண்ணில் நீர் வடியும் தொந்தரவும், பார்வை மங்கி, பார்வை பறிபோய் விடும் என்ற அச்சத்தில் மருத்துவமனையை நாடி நியாயம் கேட்டுள்ளார். அறுவை சிகிச்சை முறையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறி, வேண்டுமென்றால் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சென்று பார்த்துக் கொள்ளும்படி, மருத்துவமனை நிர்வாகம் அவரை திருப்பி அனுப்பி உள்ளது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை முறையாக செய்யாத காரணத்தால் தனக்கு கண்பார்வையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை முன்பாக கழுத்தில் பதாகை ஏந்தி முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தப் போராட்டத்தின் போது முதியவரிடம் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மருத்துவமனை ஊழியர்கள் கைகளை காட்டி மிரட்டி செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, உரிய விளக்கம் தர மறுத்து விட்டனர்.
குளித்தலையில் பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை.
குளித்தலையில் குடும்பப் பிரச்சனையில் பள்ளி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை இமாம் ஷாகிப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் 38. இவர் கோட்டைமேடு பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மது அருந்துவதை இவர் மனைவி நிவேதா தடுத்து வந்துள்ளார்.
இதனால் விரத்தி அடைந்த ரவிக்கு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வெளியே சென்று இருந்த நிவேதா வீட்டுக்கு திரும்பிய போது ரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் நிவேதா. இது குறித்து குளித்தலை காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த ரவிக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.