மேலும் அறிய

கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சி வட்டம், ஓந்தாம்பட்டியிலுள்ள தனியார் விவசாய விளை நிலத்தில் இன்று வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.


கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், தமிழக அரசால் "பசுமை தமிழ்நாடு" திட்டத்தின் கீழ், 2022-2023 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 1.77 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில்  5,77,500 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு பணி தொடங்கவுள்ளது. இதில் விவசாய நிலங்களில் மட்டும் நடுவதற்கு 3,15,000 மரக்கன்றுகள் வனத்துறையினரால் நர்சரிகளில் நடவு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் தயாராக உள்ளது. விலை இல்லாமல் நீங்கள் மரக்கன்றுகளை வாங்கிக் கொள்ளலாம். வனத்துறையினர் நீங்கள் மரங்களை நடுவதற்கு உரிய உதவி செய்து கொடுப்பார்கள். 


கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் விவசாய நிலங்களில் தேக்கு, வேம்பு, செம்மரம், மகாகனி, பெருமரம், சவுக்கு போன்ற விலை உயர்ந்த மரக்கன்றுகளை  நடவு செய்திட முன்வர வேண்டும். இன்றைய தினம் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டி கிராமத்தில் உள்ள சிவகுமார் அவர்களின் விளை நிலத்தில் மரக்கன்றுகள் நடக்கூடிய விழாவை தொடங்கி வைத்திருக்கிறோம். தொடர்ந்து விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் தேவைப்படும் மரக்கன்றுகளை வனத்துறையிலும், அருகில் உள்ள வன அலுவலகங்களிலும் பெற்று உங்களுடைய விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டு,  நீங்கள் உங்கள் நிலத்தையும், இந்த நாட்டினுடைய வளத்தையும் பெருக்க வேண்டும். மேலும், வனத்தினுடைய பரப்பை அதிகரிக்க வேண்டும்.


கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

மரக்கன்றுகள் இன்றைய தேதியில் ஒரு டன்னுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பு வரக்கூடிய 20 ஆண்டுகளில் அது முழுமையான வளர்ச்சி பெற்று இருக்கும். மிகுந்த விலை உயர்ந்த பலன் தரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதற்கு வனத்துறை தகுந்த ஆலோசனை பெற்று அவர்கள் கூறும் அறிவுரையின்படி மரக்கன்றுகளை நடவு செய்து, பயன்பெற வேண்டும். மேலும், மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். இதனை பொதுமக்களும், விவசாய மக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு என தெரிவித்துள்ளார். 


கரூரில் வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்யும் தொடக்க விழா

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சரவணன், வனசரக அலுவலர்கள் செல்வகுமார், முரளிதரன், சசிஹரிபிரியா, அறிவழகன், தண்டபாணி, சிவா, கனகராஜ், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், வட்டாட்சியர் சிவக்குமார், ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மணி, உறுப்பினர் ரவீந்திரன், நில உரிமையாளர்கள் ராஜேஸ்வரி சிவக்குமார், கீதாவடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
Kanchipuram New Bus Stand: காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget