கரூர்: பெரியாண்டாங் கோயில் தடுப்பணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைவு
ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 87.47 அடியாக இருந்தது. அணைப்பகுதிகளில் 4 மி.மீ., மழை பெய்தது.
கரூர் அருகே, பெரியாண்டாங் கோயில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. அணைப்பாளையத்தில் 70.3 மி.மீ., மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,536 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 2,558 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 3566 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், காலை தண்ணீர் வரத்து 2,446 கன அடியாக குறைந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 87.47 அடியாக இருந்தது. அணைப்பகுதிகளில் 4 மி.மீ., மழை பெய்தது.
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு மாலை வினாடிக்கு, 60 ஆயிரத்து, 357 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 52 ஆயிரத்து, 501 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 51 ஆயிரத்து, 281 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 33.40 கனஅடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.14 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை பகுதியில் 3 மி.மீ., மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,) கரூர் 11.2, அரவக்குறிச்சி 36, அணைப்பாளையம் 70.3, க.பரமத்தி 39.2, தோகமலை 1, கடவூர் 21, பாலவிடுதி 15.2, மைலம்பட்டி 2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 18.41 மி.மீ., மழை பதிவானது.