மேலும் அறிய

கரூர் ஆண்டாங்கோயில் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருட்டு - முன்னாள் அமைச்சர் புகார்

மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் ஆண்டாங்கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் தினம்தோறும் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருடி வருகின்றனர்.

கரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் தினம்தோறும் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருடி வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

 


கரூர் ஆண்டாங்கோயில் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருட்டு - முன்னாள் அமைச்சர் புகார்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளுடன் புகைப்பட ஆதாரத்துடன் மனு அளித்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், “அமராவதி அணையிலிருந்து வரக்கூடிய, அமராவதி ஆற்றை நம்பி இருக்கக்கூடிய ஆண்டாள் கீழ் பாகம், மேல் பாகம், கருப்பம்பாளையம், அபிபாளையம், பல்லாப்பாளையம், விஸ்வநாதபுரி, தாளப்பட்டி ஆகிய என 18 க்கும் மேற்பட்ட குக்கிராம பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு தான் உள்ளது. 

 


கரூர் ஆண்டாங்கோயில் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருட்டு - முன்னாள் அமைச்சர் புகார்

 

அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கரூர் எல்லையுடன் நிறுத்தி விடுகின்றனர். அமராவதி அற்றில் தற்பொழுது தண்ணீர் இல்லாத நேரங்களில் லாரிகள் மூலமாக தண்ணீர் திருடி வருகின்றனர். மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் ஆண்டாங்கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் தினம்தோறும் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருடி வருகின்றனர். இதனால் ஆண்டாள் கோவில் கீழ்ப்பாக்கம் பஞ்சாயத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எந்த எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

 


கரூர் ஆண்டாங்கோயில் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருட்டு - முன்னாள் அமைச்சர் புகார்

 

அமராவதி அணையில் 55 அடி நீர் உள்ளது குடிப்பதற்காக இந்த ஒரு முறை அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்தால் ஒரு மாதத்திற்கு குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்கும் இல்லையென்றால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் போதிய குடிநீர் கிடைக்காத நிலையில்  அமராவதி அணையில் திறக்கப்படும் நீரானது கரூர் மாவட்ட எல்லையான சின்னதாராபுரம் பகுதியுடன் நிறுத்தி விடுகின்றனர். இதனால் கரூர் பகுதிகளில் குடிப்பதற்கு குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கரூர் மாவட்டத்தை மாவட்ட நிர்வாகம் புறக்கணிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget