மாவட்டத்தில் முதல் நபராக குடும்பத்துடன் வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய கரூர் ஆட்சியர்
இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை அனைத்து இல்லங்களிலும் பறக்க விட வேண்டும் என்ற நிலையில் ஆட்சித்தலைவர் முதல் ஆளாக தனது குடும்பத்துடன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தனது இல்லத்தில் இன்று (13.08.2022) தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார்கள்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்-
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றி வைக்கும் நிகழ்வு இனிதே தொடங்கி இருக்கின்றன. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முன்னோடியாக ஆட்சித்தலைவர் என்ற முறையில் என்னுடைய வீட்டில் ஆகஸ்ட் 13, 14, 15 தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு எனது வீட்டில் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி பறப்பதற்காக இன்று தேசிய கொடியினை ஏற்றி உள்ளேன்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நமது நாட்டின் சுதந்திர தின விழாவினை மகிழ்ச்சியுடனும் மிகுந்த ஆரவாரத்துடனும் கொண்டாடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கரூர் மாவட்ட மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
நமது மாவட்டம் முழுவதும் 3.30 இலட்சத்திற்க்கு மேல் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். அதை தவிர ஒவ்வொரு அரசு அலுவலகங்கள் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள் அனைத்து வீடுகளிளும் கிட்டத்தட்ட 3.50 இலட்சம் தேசிய கொடியினை ஏற்றி பறக்க விட உள்ளார்கள். அதற்கு தேவையான தேசியக்கொடி நமது மாவட்டத்தைச் சேர்ந்த 500 பேர் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், பொது மக்களுக்கு தேசியக்கொடியை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் அனைவரும் சுதந்திர தின விழாவினை கொண்டாட வேண்டுமென அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்