மேலும் அறிய

கரூரில் விரைவில் முருங்கை பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் கரூரில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கரூரில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி.

கரூரில் முருங்கை பூங்கா

விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் கரூரில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கரூரில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

கரூர் கோவை ரோடு, தனியார் அரங்கில் நடைபெறும் சர்வதேச முருங்கை கண்காட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறு சிறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மின்சாரத்துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்து, கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.

கரூரில் விரைவில் முருங்கை பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் விவசாய பெருமக்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் முருங்கை சார்ந்த விவசாய பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை பொடி வகைகள், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முருங்கை சார்ந்த விவசாய பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்யக்கூடிய நவீன இயந்திரங்கள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

கரூரில் விரைவில் முருங்கை பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது, கரூர் மாவட்டத்தில் முருங்கை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முருங்கை பூங்கா அமைப்பதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்திருந்த நிலையில், முதல்வர் கவனத்திற்கு அது எடுத்துச் செல்லப்பட்டு முதல்வரும் இசைவு தெரிவித்துள்ளார். முருங்கை பூங்கா அமைப்பதற்கான இடத்தை பெற்று தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் கரூரில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கரூரில் விரைவில் முருங்கை பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் பருவ மழையால் இதுவரை பாதிப்புகள் ஏற்படவில்லை. வேளாண்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் அதிகாரிகளை வைத்து கணக்கெடுக்கும் பணியும், பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை கண்காணித்து முதல்வர் அனுமதியுடன் இழப்பீடு வழங்க தயார் நிலையில் இருக்கிறோம் என்று உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வீடு, மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை !! வழக்கறிஞர், ஆவண எழுத்தர் யாருக்கு முக்கியத்துவம் ?
வீடு, மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை !! வழக்கறிஞர், ஆவண எழுத்தர் யாருக்கு முக்கியத்துவம் ?
விபத்தில் பறிபோன பிஞ்சு உயிர்! கருவிலேயே கலைந்த மற்றொரு கனவு - திருப்பத்தூரில் நெஞ்சை உருக்கும் துயரம்
விபத்தில் பறிபோன பிஞ்சு உயிர்! கருவிலேயே கலைந்த மற்றொரு கனவு - திருப்பத்தூரில் நெஞ்சை உருக்கும் துயரம்
TN Election 2026: அச்சக உரிமையாளர்களே! - தேர்தல் ஆணையத்தின் புதிய ரூல்ஸ்... கலெக்டர் வார்னிங்!
TN Election 2026: அச்சக உரிமையாளர்களே! - தேர்தல் ஆணையத்தின் புதிய ரூல்ஸ்... கலெக்டர் வார்னிங்!
Puducherry Election: யார் அந்த 14 பேர்? புதுச்சேரி பாஜகவின் மெகா பிளான்... ரெடியாகும் தேர்தல் அறிக்கை!
Puducherry Election: யார் அந்த 14 பேர்? புதுச்சேரி பாஜகவின் மெகா பிளான்... ரெடியாகும் தேர்தல் அறிக்கை!
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
Embed widget