மேலும் அறிய

புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் - எம்.பி ஜோதிமணி

புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் - மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று எம்.பி ஜோதிமணி கரூரில் பேட்டி.

ஜனநாயக நாட்டில் இந்திய குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை முறையாக பதிவு செய்து, நடத்தும் உரிமை உள்ளது. புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.

புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் - எம்.பி ஜோதிமணி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நிகழ்ச்சியினை காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் எம்.பி ஜோதிமணி ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்தனர்.

புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் - எம்.பி ஜோதிமணி

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி: ஜனநாயக நாட்டில் இந்திய குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை முறையாக பதிவு செய்து, நடத்தும் உரிமை உள்ளது. புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கட்சி புதிதாக துவங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பின்புலத்தில் யார் உள்ளார் என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. கட்சியின் கொள்கையை அறிவித்து மக்களை சந்திக்கும் போதுதான் அவர்கள் நிலைப்பாடு என்ன என்பது தெரியும்.

புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் - எம்.பி ஜோதிமணி

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்து மக்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நடந்து முடிந்த தேர்தலில் 100 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி கிடைத்தது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் அது பிரதிபலிக்கும். நல்லாட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள்.

புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் - எம்.பி ஜோதிமணி

கல்வி என்பது அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சிந்தனையோடு இருக்க வேண்டும். கல்விக்கூடத்தில் பழமை வாத சித்தாந்தங்களை பாஜக மட்டுமே தொடர்ந்து புகுத்தி வருகிறது. மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!

சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!

7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?

ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!

NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?

Siima Awards 2024 : சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
Embed widget