கரூரில் அமைச்சர் எ.வ. வேலுக்கு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலத்தில் 5ம் நாள் சோதனை
இந்த சோதனையில் மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூரில் அமைச்சர் எ.வ. வேலுக்கு தொடர்புள்ளவர்களின் வீடு மற்றும் அலுவலத்தில் 5ம் நாள் சோதனை தொடர உள்ளது.

அமைச்சர் எ.வ. வேலுவுக்கு மிகவும் தொடர்புடையவர் என கூறப்படும் சுரேஷ் என்பவருடைய வையாபுரி நகரில் உள்ள வீட்டிலும், காந்திபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்திலும் 5ம் நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற உள்ளது. கரூரில் சுரேஷ் என்பவருடைய வீடு மற்றும் நிதி நிறுவனத்தில் மட்டுமே தற்பொழுது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 4-ம் நாளன நள்ளிரவிலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மீண்டும் சோதனை தொடர உள்ளது. மத்திய துணை ராணுவ படை வீரர்கள் சுரேஷுடைய வீட்டிலும் அலுவலகத்திலும் இரவு பகல் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் இரவிலும் 4-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை.

அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 3-ம் தேதி தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை தொடங்கின. இரண்டு இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில்,தொடர்ந்து காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள அவரது வீடு என இரவிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இரவில் சற்று ஓய்வு எடுக்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதன் பின் தொடர்ந்து நான்கு நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நிதி நிறுவனத்தில் கோப்புகள் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த சோதனையில் மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையானது தொடரும் என கூறப்படுகிறது.





















