கரூர்: மழையால் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில் கார்வாழி பஞ்சாயத்தில் ஆத்துப்பாளையம் அணையுள்ளது. கடந்த ஒரு மாதமாக அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.
மாயனூர் கதவணை
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 933 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 876 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 121 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 52.14 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை 39. 37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 38.81 அடியாக உள்ளது. நங்காஞ்சிஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் க.பரமத்தியில் மட்டும் 1.6 மி. மீ மழை பதிவானது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள க. பரமத்தி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கோடை வெப்பம் அதிகபட்சமாக 14 டிகிரி காணப்பட்டது. அதேபோல், கரூர் நகரப் பகுதியை ஒட்டியுள்ள சில இடங்களில் கோடைகால மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சில இடங்களில் கோடை வெப்ப தாக்கம் அதிகரித்து வரும், நிலையில் சில இடங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது. மேலும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பகல் நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி தங்களது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் மதிய வேளையில் வெளியே செல்லும் பொழுது ,குடைகள் மற்றும் துப்பட்டா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். மேலும், கரூர் மாவட்டத்தில் அதிக அளவு வெயில் தாக்கம் இருந்து வருவதால், தற்போது சாலை ஓரத்தில் தர்பூசணி, நுங்கு, நீர்மோர், கம்மங்கூழ், வெள்ளரி, இளநீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை பொதுமக்கள் உட்கொண்டு வருகின்றனர்.
மேலும், சில இடங்களில் வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தற்போது அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மரங்கள் இல்லாத காரணத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே அதிக அளவில் குவாரிகள் செயல்படுவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், வீட்டுக்கு ஒரு மரம் வைத்து வரும் ஆண்டிலாவது வெயிலின் தாக்கத்தை குறைத்து மழை பெய்ய இயற்கைக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.