(Source: ECI/ABP News/ABP Majha)
கரூரில் 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி வழங்கிய ஆட்சியர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மகளிர் திட்டம் சார்பில் வங்கிக் கடன் உதவி
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் மகளிர் திட்டம் சார்பில் 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,01,60,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதாரத்தில் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி சார்பில் வளர்பிறை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,90,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், அப்பாஸ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,90,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், அல்லி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,90,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், ரோஜா மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,90,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும்,
ரோஜாமகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், சர்க்கரை பாவாமகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,90,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், அன்னை இந்திராமகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,90,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், ஆலீப் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5,00,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், துளசி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும்,ஜாம்யாலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,90,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும்,
ரோஜா மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7,80,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், ஹாஸ்லீன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,60,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும், ஹக் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,90,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவியும் ஆக மொத்தம் பள்ளப்பட்டியை சேர்ந்த 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,01,60,000 மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், கரூர் மாவட்ட இந்தியன் வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளப்பட்டி இந்தியன் வங்கி மேலாளர் திவாலண்டினா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.