கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தீக்குளிக்க முயற்சி - காரணம் என்ன..?
ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தனக்கு சொந்தமான நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா போட்டு கொடுத்த விஏஓ மீது நடவடிக்கை எடுத்து, தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என மனு அளிக்க வந்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வந்தவர் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை வேறு நான்கு நபர்களுக்கு விஏஓ பட்டா வழங்கியதால் அதை மீட்க 8 ஆண்டுகளாக போராடி நியாயம் கிடைக்காதால் ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாக கூறினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான பூர்வீகமான 10 சென்ட் இடம், தேசிய மங்கலம் பகுதியில் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த 10 சென்ட் நிலத்தை அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் வேறு நான்கு நபர்களுக்கு பட்டா போட்டு அளித்துவிட்டதாகவும், அதை மீட்க 8 ஆண்டுகளாக குளித்தலை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தனது நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா போட்டு கொடுத்த விஏஓ மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் மனு அளித்து வந்துள்ளார். இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வந்த ராஜசேகர் கையோடு கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை தட்டி விட்டு அவரை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு தனக்கு பூர்வீகமான தன் பெயரில் உள்ள 10 சென்ட் நிலத்தை அந்தப் பகுதியில் உள்ள விஏஓ வேறு நான்கு நபர்களுக்கு பட்டா போட்டு கொடுத்ததாகவும், அவர்கள் தன்னுடைய நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், நிலத்தை மீட்க 10 ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்து போராடியும் நியாயம் கிடைக்கவில்லை என்பதால், வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார். தொடர்ந்து ராஜசேகரிடம் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நூதன முறையில் எமதர்ம வேடமனிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், கடம்பன்குறிச்சி பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்தும் பன்றிகளை அகற்றக்கோரி நூதன முறையில் எமதர்ம வேடமணிந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்.முத்துக்குமார் என்பவர் நூதன முறையில் மனு அளிக்க வந்தபோது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதற்காக அவர் கொண்டு வந்த மனுவில், கடம்பன்குறிச்சி கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
எங்கள் ஊரில் கோவிலுக்கு அருகாமையில் உள்ள புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பன்றிகளை வளர்த்து நோய் தொற்று ஏற்படும் வகையிலும், பொதுமக்கள் கடந்து செல்ல இடையூறும், குழந்தைகளுக்கு பாதுகாப்பின்றி அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் சார்பாக 20.05.2022 அன்று தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் 23.05.2022, 01.08.2022 மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் புகார் மனு ஊர் பொதுமக்கள் சார்பாக அளிக்கப்பட்டது.
01.08.2022 அன்று கொடுக்கப்பட்ட மனுமீதான நடவடிக்கையாக கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறித்தியதின் பேரில் ஊராட்சி மன்ற தலைவருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டு, அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் இதுநாள் வரை ஊராட்சி மன்றத்தலைவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறார். பன்றிகளை அப்புறப்படுத்த ஊராட்சி மன்றத்தலைவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.