கரூரில் வங்கி முன்பு தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 65 வயது மூதாட்டி - காரணம் என்ன..?
முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு வங்கியில் புதிய கணக்கு தொடங்குவதற்காக செல்லம்மாள் வங்கி மேலாளரை அணுகியபோது அவர் ரூ.5000 இருந்தால் மட்டும் தான் வங்கி கணக்கை தொடங்க முடியும் என்றார்.
கரூர் அருகே முதியோர் உதவித் தொகை பெற தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க மறுத்த தனியார் வங்கி முன்பு 65 வயது மூதாட்டி செல்லம்மாள் தன்னந்தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரத்தில் உள்ள எல்விபி (டிபிஎஸ்) தனியார் வங்கியில் ஓமாந்தூரை சேர்ந்த மாற்றுதிறனாளி செல்லம்மாள்.
அரசின் உதவித்தொகையான முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு வங்கியில் புதிய கணக்கு தொடங்குவதற்காக வங்கி மேலாளரை அணுகியபோது அவர் ஐந்தாயிரம் பணம் இருந்தால் மட்டும் தான் வங்கி கணக்கை தொடங்க முடியும் என்று கூறியுள்ளார். அப்போது, தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு மூதாட்டி ஒரு மாத காலமாக அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மனம் உடைந்த மூதாட்டி வங்கியின் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியிடம் சமாதானப்படுத்தி வங்கி மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கணக்கு தொடங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்