Karunas Slams TVK Vijay: "சூட்டிங் எதாவது கூப்பிட்டா வருவாரு" SIR ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த விஜய்! கருணாஸ் விளாசல்
SIR எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்த போகிறது என்பதை தெரியாமல் விஜய் இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது என விமர்ச்சித்திருந்தார்

கரூர் மக்களை பனையூருக்கு அழைத்து பேசியவர் எப்படி SIR கூட்டத்தில் கலந்துக்கொள்வர் அவரை சூட்டிங் எதாவது இருந்தால் கூப்பிடுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் விமர்சித்துள்ளார்
SIR ஆலோசனைக் கூட்டம்:
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் நாளை மறுநாள் (நவம்பர் 3) இந்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இது குறித்து ஆலோசிக்க சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் அழைப்பு விடுக்கப்பட்ட 64 கட்சிகளில் 49 கட்சிகள் கலந்துக்கொண்டன. இதில் தவெக, நாதக, அமமுக, அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.
கருணாஸ் பேச்சு
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் கருணாஸ் கூட்டத்தை புறக்கணித்த தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் தெரிவித்தாவது.
“முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பற்றியும், அதன் விபரீதத்தை பற்றியும் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள். மேலும் விஜய் கலந்துக்கொள்ளதது குறித்த கேள்விக்கு பதிலளித்த "இது அவரின் அரசியல் அறியாமையை தான் காட்டுகிறது. இதற்கு முன்பு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இதிலிருந்து அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு பெரிய பாதிப்பை உணர்த்த போகிறது என்பதை உணராமல் இருக்கிறார். பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்.
அறியாமையில் விஜய்:
மேலும் இது வெறுமனே வாக்குரிமைகளை மட்டுமே நீக்குவதற்கான நோக்கம் இல்லை. இது குடியுரிமையை இழக்க வைப்பதற்கான நடவடிக்கை என்பது எங்களின் குற்றச்சாட்டு ஆகும். அதற்கு 1,000 ஆதாரங்கள் உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர்கள் தனித்து விடப் போகிறார்கள். தமிழர்கள் மண்ணை இழந்து, உரிமைகளை இழந்து அனாதைகளாக, அகதிகளாக இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு 40 வருடங்களாக குடியுரிமை வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
வரும் காலங்களில் மத்திய அரசு தமிழகத்தை நாதியற்ற கூட்டமாக மாற்றுவதற்கான முயற்சி என்பதை கூட உணராமல், யாரோ எழுதிக் கொடுத்ததை விஜய் படிப்பதை அவரும் தமிழர் என்கிற முறையில் உண்மையில் வேதனையளிக்கிறது. இதில் என்ன நாடகம் இருக்கப் போகிறது. அப்படி நாடகமாக இருந்தால் சினிமா சூட்டிங்கை விட்டு விட்டு நாங்கள் ஏன் இங்கு வரவேண்டும் என்றார்
ஷூட்டிங்கிற்கு கூப்பிடுங்க வருவார்:
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் பனையூருக்கு வந்து பார்க்க வைத்தவர் எப்படி இந்த கூட்டத்திற்கு எல்லாம் எப்படி வருவார். ஷுட்டிங் எதாவது இருந்தால் கூப்பிடுங்கள் அதற்கு வருவார் என்று கருணாஸ் பேசியிருந்தார்






















