தமிழகத்தில் மிக உயரமான தேசியக்கொடி - குமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்றினார்
தமிழகத்தில் மிக உயரமான தேசியக்கொடி கன்னியாகுமரியில் ஏற்றப்பட்டது.
தமிழகத்தில் மிக உயரமான தேசியக்கொடி கன்னியாகுமரியில் ஏற்றப்பட்டது. மாநிலங்களவை எம்.பி., நிதியில் நிறுவப்பட்ட 147.60 அடி உயர கொடிக்கம்பத்தில் 48 அடி நீளமும் 32 அடி அகலமும் கொண்ட தேசிய கொடியை தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்றினார்.
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் டெல்லியில் இருப்பது போல் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு மாநிலங்களவை எம்.பி., விஜயகுமார் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பில் 147.60 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பம் அமைத்துள்ளனர்.
அதில் இன்று 48 அடி நீளமும் 32 அடி உயரமும் கொண்ட தேசியக்கொடியை தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்றினார். இதில் மாநிலங்களவை எம்.பி., விஜயக்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், நயினார் நாகேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி விடுமுறையில் குமரி மாவட்டம் வந்துள்ள ராணுவ வீரர்கள் கையில் கொடி வைக்கப்பட்டிருந்தது, தொடர்ந்து மின்சார இயந்திரம் மூலம் கொடி ஏற்றப்பட்டது. தமிழகத்தில் இதுவே மிகப்பெரிய கொடிக்கம்பம் ஆகும். வருடத்தின் எல்லா நாட்களும் இரவும் பகலுமாக பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Vikram OTT Release: நாயகன் 'ஓடிடி'யில் வரார்... ஹாட் ஸ்டாரில் களமிறங்கும் விக்ரம்! ஓடிடி ரிலீஸ் விவரம்!
மேலும், இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு வசதியாக மின்னொளியில் மிளிர செய்வதற்கான மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: TNPSC Group 1 Result 2022: வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்.. காண்பது எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்