மேலும் அறிய

‛கொரோனா பெயரில் ஊழல் நடந்துள்ளது’ நெல்லை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு!

‛அ.தி.மு.க.வினர் கொரோனாவை காரணம் காட்டி, பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை அதிகளவில் செலவு செய்து அதிலும் ஊழல் செய்துள்ளனர்’- கனிமொழி எம்.பி பேச்சு

நெல்லை மாவட்டத்தில் நடைபெறுகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் யூனியன் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் நடந்தது.

‛கொரோனா பெயரில் ஊழல் நடந்துள்ளது’ நெல்லை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு!

கூட்டத்திற்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மனோ தங்கராஜ், கீதாஜீவன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்தியாவிலேயே எல்லோரும் பாராட்டக்கூடிய மற்றும் அனைத்து பத்திரிகைகளும் பாராட்டி எழுதக்கூடிய நல்லாட்சி தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் நாம் ஆட்சிக்கு வந்தோம். ஆனால் நம்முடைய முதல்-அமைச்சரின் திட்டமிடுதலும், அமைச்சர்களின் உழைப்பாலும் நோய்த்தொற்று குறைந்துள்ளது.
 
அ.தி.மு.க.வினர் கொரோனாவை காரணம் காட்டி, பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை அதிகளவில் செலவு செய்து அதிலும் ஊழல் செய்துள்ளனர். தமிழக மக்கள் இந்த ஆட்சியில்தான் நிம்மதியாக இருக்கிறார்கள். மக்களுக்கு எது தேவை என்பதை முதல்-அமைச்சர் சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
‛கொரோனா பெயரில் ஊழல் நடந்துள்ளது’ நெல்லை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு!
 
அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்றால் அது உள்ளாட்சி பிரதிநிதிகளால் தான் முடியும். எனவே உள்ளாட்சியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் முதல்-அமைச்சர் நினைப்பதையும், அவருடைய எண்ணத்தையும், அவர் போடுகின்ற நலத்திட்டங்களும் மக்களை சென்றடையும்.
 
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். இந்த தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
கூட்டத்தில், அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், தி.மு.க. ஆட்சியில்தான் முதன்முதலில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
 
தி.மு.க.வை பற்றியும், தி.மு.க. ஆட்சியை பற்றியும் பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை கிடையாது. கூட்டுறவு சங்கங்களில் போலி நகைகளை வைத்து அதிகளவில் கடன் வாங்கியுள்ளனர். இதுகுறித்து முறைப்படி விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றி பெற்றுத்தர வேண்டும்Õ என்றார்.
 
கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
Pope Francis: போப் ஃப்ரான்சிஸ் தொடர்ந்து கவலைக்கிடம்..! அடுத்த போப் யார்? தேர்வு செய்யப்படுவது எப்படி?
Pope Francis: போப் ஃப்ரான்சிஸ் தொடர்ந்து கவலைக்கிடம்..! அடுத்த போப் யார்? தேர்வு செய்யப்படுவது எப்படி?
Rasipalan (24-02-2025): துலாம் ராசிக்கு நன்மை; மிதுனத்திற்கு வெற்றி - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan (24-02-2025): துலாம் ராசிக்கு நன்மை; மிதுனத்திற்கு வெற்றி - உங்க ராசிக்கு எப்படி?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
Pope Francis: போப் ஃப்ரான்சிஸ் தொடர்ந்து கவலைக்கிடம்..! அடுத்த போப் யார்? தேர்வு செய்யப்படுவது எப்படி?
Pope Francis: போப் ஃப்ரான்சிஸ் தொடர்ந்து கவலைக்கிடம்..! அடுத்த போப் யார்? தேர்வு செய்யப்படுவது எப்படி?
Rasipalan (24-02-2025): துலாம் ராசிக்கு நன்மை; மிதுனத்திற்கு வெற்றி - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan (24-02-2025): துலாம் ராசிக்கு நன்மை; மிதுனத்திற்கு வெற்றி - உங்க ராசிக்கு எப்படி?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Embed widget