காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை! 18/11/2025: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம்!
Kanchipuram Power Shutdown Tommorow "காஞ்சிபுரத்தில் நாளை (18.11.2025) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது"

Kanchipuram Powercut: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடுவதால் மின் தடை மேற்கொள்ளப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக மின்தடை
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 18.11.2025 செவ்வாய்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அதற்கேற்றவாறு மின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு, மின்சாரத்துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் எந்தெந்த பகுதியில் மின் தடை ? Kanchipuram Power Shutdown
காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு,தெற்கு மற்றும்
நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
எண்ணைக்காரத் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.
சதாவரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் நாளை 18.11.2025 செவ்வாய்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் நேரம்
பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட உள்ளதால், காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.





















