காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா 2025: அறிவு விருந்துக்கு தயாராகுங்கள்! 100+ அரங்குகள், எழுத்தாளர்கள் பங்கேற்பு!
Kanchipuram Book Festival: "காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா, 19.12.2025 முதல் 29.12.2025 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது"

Kanchipuram Book Fair Date and time: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா-2025 ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் 19.12.2025 முதல் 29.12.2025 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
நான்காவது மாபெரும் புத்தக திருவிழா - 2025 Kanchipuram Book Fair
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்தும் நான்காவது மாபெரும் புத்தக திருவிழா-2025 தொடங்கப்படவுள்ளது.
இப்புத்தக திருவிழா 19.12.2025 முதல் 29.12.2025 வரை 11 நாட்கள் நடைபெறுகின்றது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 1000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், அமைக்கப்பட்டு, இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. இப்புத்தக கண்காட்சி அறிவு பசிக்கு மாபெரும் விருந்தாகும், இப்புத்தக கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் படைப்புகளும் இடம் பெறுகின்றன.
தினம்தோறும் முக்கிய விருந்தினர்கள்
மேலும் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை முதல் மாலை வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள், சிந்தனை தூண்டும் பேச்சாளர்களின் கருத்துரைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. எனவே புத்தக ஆர்வலர்கள், மாணவ / மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.





















