மழை இல்லாமலே நிரம்பிய ஏரிகள்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ஆச்சரியம்! தண்ணீர் தட்டுப்பாடு தீருமா?
Kanchipuram Lakes: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரிகள் நிரம்ப தொடங்கியுள்ளன.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக இருந்து வரும், தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக இந்த ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் அருகில் இருக்கும் ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிடப்பட்டு, ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் விவரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 381 ஏரிகளில் 6 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதில் 31 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 104 ஏரியில் 50 சதவீதத்துக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. 157 ஏரியில் 25 சதவீதத்திற்கும் மேல் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்ட நிலை என்ன?
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 528 ஏரிகளில், ஆறு ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 94 ஏரிகளில் 50 சதவீதத்திற்கு மேல் நீர் இருப்பு உள்ளது. 253 ஏரிகளில் 25% நீர் இருப்பு உள்ளன.
இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 93 ஏரிகளில் மூன்று ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 10 ஏரிகள் நிறமும் தருவாயில் உள்ளன. 34 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு மேல் நீர் இருப்பு உள்ளன. 31 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு மேல் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாலாறு பகுதியில் உள்ள 102 ஏரியில் 9 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருக்கின்றன. 47 ஏரிகளில் 75 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் உள்ளன. 236 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளன. 25 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. 4 ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீர் இதுவரை இல்லாத ஏரிகளாக இருக்கின்றன.





















