மக்கள் அச்சம் தீர தடுப்பூசி போட்ட விவேக் நலம் பெற வேண்டும் - கமல் டுவிட்

பொதுமக்களின் அச்சம் தீர கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் விவேக் விரைவில் நலம் பெற வேண்டும் என்று கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கிற்கு இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.மக்கள் அச்சம் தீர தடுப்பூசி போட்ட விவேக் நலம் பெற வேண்டும் - கமல் டுவிட்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர், தி.மு.க. தலைவர் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் தவிர, பல்வேறு திரைப்பிரபலங்களும் விவேக் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1383047346670366728?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 16, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

“கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.”

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1383047344803905544?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 16, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

“அவரது உடல் நலக்குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள விவேக் , கமல்ஹாசனுடன் மட்டும் இதுவரை இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Vaccine kamalhasan covid 19 mnm actor Vivek heart attack

தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

டாப் நியூஸ்

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy  | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!

ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர்  திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!