![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kalaignar Kottam: ஆழித்தேர் வடிவில் கட்டமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம்.. இன்று திறந்துவைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்
திருவாரூரில் 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் இன்று மாலை திறக்கப்படுகிறது. இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் திறந்து வைக்கிறார்.
![Kalaignar Kottam: ஆழித்தேர் வடிவில் கட்டமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம்.. இன்று திறந்துவைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் kalaignar Kottam, built at a cost of Rs 12 crore in Tiruvarur, is being inaugurated this evening. Bihar Chief Minister Nitish Kumar will inaugurate this Kalaignar Kottam: ஆழித்தேர் வடிவில் கட்டமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம்.. இன்று திறந்துவைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/e34c42e168e770ddb10eb02a77bb984d1687231730038589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மறைந்த திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் கொண்டாட திமுக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.
அடுத்ததாக திருவாரூரில் 7 ஆயிரம் சதுரடியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது. கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் திறந்து வைக்கிறார். பீகார் முதலமைச்சருடன், அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஷ்வி யாதவ் உடன் வருகை தருகிறார். ஏற்கனவே ஜூன் 3 ம் தேதி இந்த கலைஞர் கோட்டம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி திறப்பு விழா நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. பின் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது. இந்தக் கோட்டம் திறக்கப்பட்டால் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாறுகின்ற தரத்தோடு மறைந்த கருணாநிதி குறித்த தகவல்களை ஆவணப்படுத்தி உலகுக்கு எடுத்துச் செல்லும் உணர்வு மிக்க இடமாக திகழும் வகையில் பிரம்மாண்டமாக இந்த கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டத்தில், கருணாநிதியின் இளமை கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களோடு கருணாநிதி ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள் கட்டுரைகள் என காட்சி படுத்தப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தின் முன்பக்கத்தில் மளிகை கற்களால் கலைஞர் திருவுருவ சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார். திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளும் பீகார் முதலமைச்சரை வரவேற்பது குறித்தும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் அகில இந்திய அரசியல் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த திறப்பு விழா நாடாளுமன்றத் தேர்தலுக்கான முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Modi US Visit: முக்கியத்துவம் வாய்ந்த பயணம்.. அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)