Kalaignar 100th Birthday: மகளிர் வளர்ச்சியில் மாஸ் காட்டிய கலைஞர்! மறக்க முடியாத திட்டங்களை நீங்களே பாருங்க!
Kalaignar Karunanidhi 100: தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னோடியாக இருப்பதற்கு கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மிகவும் முக்கியம் ஆகும்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தி.மு.க. அரசும், தி.மு.க.வும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னோடியாக இருப்பதற்கு கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மிகவும் முக்கியம் ஆகும்.
மகளிர் திட்டங்கள்:
தமிழ்நாட்டில் இன்று பெண்கள் கல்வி அறிவிலும், வேலைவாய்ப்பிலும் இன்று முன்னோடியாக இருப்பதற்கு முக்கிய காரணம் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது ஆகும். அப்பேற்பட்ட திட்டங்களை கீழே காணலாம்.
- விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கைம்பெண் மறுமண நிதி உதவித்திட்டம்
- அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு
- சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றம்
- தி.மு.க.வின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் நினைவாக ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம்
- உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு
- ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு
- பெண்கள் யாரையும் நம்பாமல் சுயமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1989ல் சுய உதவிக்குழுக்கள் திட்டம் அறிமுகம்.
- 1989ம் ஆண்டு ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டம்.
- 1989ம் ஆண்டு பங்காரு அம்மையார் பெண்கள் முன்னேற்ற திட்டம்.
- டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணத்திட்டம் – இத்திட்டப்படி 1989 -1990 தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு தலா 5 ஆயிரம் நிதியும், 96-2001 ஆட்சியில் 904 பெண்களுக்கு தலா 10 ஆயிரமும், 2006-2011 ஆட்சியில் 16 ஆயிரத்து 365 பெண்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
- மகளிர் இலவசமாக படிப்பதை உறுதி செய்வதற்காக 1989ல் ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவச படிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை பெண்களுக்காக தி.மு.க. ஆட்சியில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
இன்னும் ஏராளமான பல திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்திற்காக தி.மு.க. ஆட்சியின்போது கருணாநிதி அமல்படுத்தினார். தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பெண்களின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kalaignar 100: நெசவுக்கு 500 யூனிட் இலவசம்; உழவுக்கு முற்றிலும் இலவசம்.. கலைஞர் செய்தது என்னென்ன?
மேலும் படிக்க: Wrestlers Protest : மல்யுத்த வீராங்கனைகள் மாத்தி மாத்தி பேசிக்கிட்டு இருக்காங்க.. குற்றம்சாட்டப்பட்ட ப்ரிஜ் பூஷண் சிங் பேச்சு