Kalaignar 100: நெசவுக்கு 500 யூனிட் இலவசம்; உழவுக்கு முற்றிலும் இலவசம்.. கலைஞர் செய்தது என்னென்ன?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உழவுக்கும் நெசவுக்கும் தனது ஆட்சிக் காலத்தில் செய்தது என்னென் என்பதை அவரது 100-வது பிறந்த நாளில் காணலாம்.
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு பல முதலமைச்சர்களை தேர்வு செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டை அதிக முறை அதாவது 21 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி. அவர் தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் அடையாளங்களில் முக்கிய்வையான உழவுக்கும் நெசவுக்கும் என்னென்ன செய்திருக்கிறார் என்பதை அவரது 100வது பிறந்த நாளில் காணலாம்.
கலைஞர் கருணாநிதியும் நெசவும்
1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் கைத்தறி தொழிலுக்கு ஆண்டு முழுவதும் தள்ளுபடி மானியம், நெசவாளர்களுக்கு காப்பீட்டு திட்டம், நெசவாளர் குடும்ப நலநிதித் திட்டம், நெசவாளர் இலவச குடியிருப்பு திட்டம், நெசவாளர்களுக்கு தனி வாரியம், தடையில்லாமல் கூட்டுறவு சங்கத் தேர்தல் மூலம் சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
ஆண்டுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் ஒரு லட்சம் கைத்தறி நெசவாளர்களும் 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறச் செய்தது.
நெசவாளர்களுக்கு கொண்டுவரப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் நெசவாளர்கள் எவ்வளவு முறை வேண்டுமானாலும் மருத்துவ வசதிகளைப் பெறலாம் என்ற மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தி நெசவாளர்களுக்கு
திமுக ஆட்சியில் 3 கோடி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
உழவும் கலைஞரும்
1990ஆம் ஆண்டு பம்புசெட்டு வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் இலவசம் என அறிவித்தார் கலைஞர். இதனால் பலன் அடைந்து விவசாயிகள் அப்போதைய எண்ணிக்கை 16 லட்சம் இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம் என்று கொண்டுவரப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க திட்டம் அது.
1980 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உழவர் சந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார் கலைஞர். அத்திட்டத்தின் கீழ் 103 உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் அமைத்தார். 2007ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர் பழைய உழவர் சந்தைகளை மறுசீரமைத்து 153 உழவர் சந்தைகளாக விரிவுபடுத்தி உழவர் சந்தைகளுக்கு உயிர் கொடுத்தார் கலைஞர்.
1996 முதல் 2001 வரை 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் அமைத்தார். 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு பதவியேற்ற நாளன்று மேடையிலேயே விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை முழுவதுமாக ரத்து செய்து உத்தரவிட்டார் கலைஞர். அதனால் தமிழகத்தில் உள்ள 22 லட்சத்து நாற்பதாயிரம் விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்தனர்.
2006 முதல் 2010வரை விவசாயிகளுக்கு பயிர் கடன் வட்டி சதவீதத்தை படிப்படியாக 9 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரை குறைத்து மொத்தம் 19லட்சத்து 70ஆயிரத்து 872 விவசாயிகளுக்கு ரூபாய் ஆறாயிரத்து 666 கோடி பயிர்கடன் வட்டியை ரத்து செய்ய வழிவகை செய்தார்.
2008ம் ஆண்டு மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போது அன்றைய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த 60,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தார்.