மேலும் அறிய

DVAC raids | விஜயபாஸ்கர் டூ அன்பழகன்..! இதுவரை 6 பேர்.. ரெய்டுக்குள்ளான மாஜி அமைச்சர்கள் ஒரு ரீவைண்ட்!

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவின் 2016லிருந்து 2021ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ததாக தருமபுரியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர்.

மேலும், அவர் மீதும், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வருமானத்தைவிட கூடுதலாக ரூ 11.32 கோடி சொத்து குவித்ததாக 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மட்டுமின்றி   சேலம், சென்னை, தெலங்கானாவின் கரீம் நகரில் சோதனை தீவிரமாக நடந்துவருகிறது.

அதிமுகவின் ஆறாவது அமைச்சர்:

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, ஆட்சி அமைந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, ஆகிய ஐந்து பேரின் வீடுகளிலும், அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

எம்.ஆர். விஜயபாஸ்கர்:

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி  பொறுப்பேற்ற பிறகு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது முதல் ரெய்டு அஸ்திரம் வீசப்பட்டது.

DVAC raids | விஜயபாஸ்கர் டூ அன்பழகன்..! இதுவரை 6 பேர்.. ரெய்டுக்குள்ளான மாஜி அமைச்சர்கள் ஒரு ரீவைண்ட்!

அவரது வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் கடந்த வருடம் (2021) ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

எஸ்.பி. வேலுமணி:

கோவை குனியமுத்தூரில் இருக்கும் எஸ்.பி. வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 52 இடங்களில் சோதனை நடந்தது.

DVAC raids | விஜயபாஸ்கர் டூ அன்பழகன்..! இதுவரை 6 பேர்.. ரெய்டுக்குள்ளான மாஜி அமைச்சர்கள் ஒரு ரீவைண்ட்!

சோதனையின்போது வீட்டுக்கு வெளியே குவிந்த அவரது ஆதரவாளர்களை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியமே ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த ஆதரவாளர்களுக்கு உணவு, குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளும் விநியோகம் செய்யப்பட்டன.

கே.சி. வீரமணி:

ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு, சகோதரர்கள் வீடு, உறவினர்கள் வீடுகளிலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களிலும் கடந்த செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் வெளிநாட்டு பணம், சொகுசு கார்கள், தங்கம் உள்ளிட்டவை எடுத்து செல்லப்பட்டன.

DVAC raids | விஜயபாஸ்கர் டூ அன்பழகன்..! இதுவரை 6 பேர்.. ரெய்டுக்குள்ளான மாஜி அமைச்சர்கள் ஒரு ரீவைண்ட்!

சி. விஜயபாஸ்கர்:

அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் லஞ்சப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அவருக்கு தொடர்புடைய சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DVAC raids | விஜயபாஸ்கர் டூ அன்பழகன்..! இதுவரை 6 பேர்.. ரெய்டுக்குள்ளான மாஜி அமைச்சர்கள் ஒரு ரீவைண்ட்!

தங்கமணி:

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் 69 இடங்களில் தங்கமணி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2.16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

DVAC raids | விஜயபாஸ்கர் டூ அன்பழகன்..! இதுவரை 6 பேர்.. ரெய்டுக்குள்ளான மாஜி அமைச்சர்கள் ஒரு ரீவைண்ட்!

தற்போது அதிமுகவில் ஆறாவது அமைச்சராக கே.பி. அன்பழகன் சோதனை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.  தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்துவருவதால் அதிமுகவின் மற்ற முன்னாள் அமைச்சர்கள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs GT: தொடக்கமே அதிரடிதான்! கில்லியாக மாறிய கில்.. நெருக்கடியில் பல்தான்ஸ்!
தொடக்கமே அதிரடிதான்! கில்லியாக மாறிய கில்.. நெருக்கடியில் பல்தான்ஸ்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs GT: தொடக்கமே அதிரடிதான்! கில்லியாக மாறிய கில்.. நெருக்கடியில் பல்தான்ஸ்!
தொடக்கமே அதிரடிதான்! கில்லியாக மாறிய கில்.. நெருக்கடியில் பல்தான்ஸ்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Trump Vs Musk: அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக!  பின்னணியில் அமித்ஷா  ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக! பின்னணியில் அமித்ஷா ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
Embed widget