மேலும் அறிய

“கொலையில்லை; கொள்ளையில்லை” - ஜெயலலிதா நினைவிடத்தில் ஒபிஎஸ் - இபிஎஸ் உறுதிமொழி

ஜெயலலிதா கொடுத்துச்சென்ற தமிழகத்தில் கொலையில்லை; கொள்ளையில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உறுதிமொழியை முன்மொழிந்தார். 

ஜெயலலிதா கொடுத்துச்சென்ற தமிழகத்தில் கொலையில்லை; கொள்ளையில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உறுதிமொழியை முன்மொழிந்தார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அதில், “தீய சக்தி தீண்டாமல், தமிழ்நாடு தலைநிமிர உறுதியேற்கிறோம். அம்மா தந்த அழகான தமிழ்நாடு, வளமான தமிழ்நாடு, கொலையில்லை, கொள்ளையில்லை, மக்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதை மீண்டும் அமைப்பதற்கு, ஓய்வின்றி உழைப்பதற்கு உறுதியேற்கிறோம்” என பன்னீர்செல்வம் முன்மொழிய தொண்டர்கள் வழிமொழிந்தனர். 

“கொலையில்லை; கொள்ளையில்லை” - ஜெயலலிதா நினைவிடத்தில் ஒபிஎஸ் - இபிஎஸ் உறுதிமொழி

முன்னதாக, ஜெயலலிதா 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி. இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். 

அதன்பின்னர், தமிழ்நாடு வந்த ஜெயலலிதா, நடிகையாக உருவெடுத்தார். தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார். தான் எந்த துறையில் கால் எடுத்து வைக்கிறாரோ அதில் அவரே கில்லியாக இருப்பார். 

அந்தவகையில்தான் தமிழகத்தில் 5 முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார் ஜெயலலிதா. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் முதலமைச்சராகப் பணி புரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர். தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.

அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். இதில் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் நடித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Embed widget